அமேசான் லிங்க்: https://www.amazon.in/dp/B07ZG34N9T
உங்களுக்கு
எழுதத் தெரியுமா?
புத்தகம் வெளியிட ஆசையாக உள்ளதா?
உங்களுக்குத்தான் இந்தப் புத்தகம்!
நீங்களாகவே இ-புத்தகம் வெளியிடுவது எப்படி? – அமேசானில் இன்று அதிகாலை வெளியாகியுள்ள புத்தம் புது இ-புத்தகம்.
உங்கள் ஸ்மார்ட்போனிலேயே வாசிக்கலாம். ஐபேட், டேப்லெட், கிண்டில் சாதனங்களிலும் படிக்கலாம்.
தொழில்நுட்பத்துக்காகவே 125-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதிய அனுபவத்தில் இந்த இ-புத்தகத்தையும் ஏராளமான விளக்கப் படங்களுடன் (என் ட்ரேட் மார்க்) எழுதி வெளியிட்டுள்ளேன்.
காம்கேர் நிறுவன வெளியீடு. விலை ரூபாய். 200/-.
அமேசான் லிங்க்: https://www.amazon.in/dp/B07ZG34N9T
எழுத்தில் திறமை இருக்கும் ஒவ்வொருவருக்குமே ஒரு புத்தகமாவது எழுதிவிட வேண்டும் என்கின்ற ஆர்வமும் இருக்கும். எந்த பதிப்பாளரை அணுகுவது, ராயல்டி யார் சரியாகக் கொடுப்பார்கள் என்றெல்லாம் மனதுக்குள் ஆயிரம் கேள்விகள் இருக்கும்.
சமீபத்தில் ‘எத்தனை புத்தகம் எழுதினால் சம்பாதிக்க முடியும் மேடம்?’ என்று எழுத்துத்துறைக்கு வர விரும்பி தமிழ் எழுத படிக்கத் தெரிந்த 25 வயது இளைஞர் ஒருவர் என்னிடம் கேட்டார்.
புத்தகம் எழுதினால் சம்பாதிக்க முடியாது, புத்தகம் விற்பனையானால் மட்டுமே சம்பாதிக்க முடியும் என்றேன்.
உண்மைதான். யார் வேண்டுமானாலும் புத்தகம் எழுதலாம். ஆனால் அவை விற்பனையானால் மட்டுமே சம்பாதிக்க முடியும்.
சமூக வலைதளங்கள் பெருகிவிட்ட இன்று எழுதும் திறமை இருப்பவர்கள் பதிவுகளாக எழுதித்தள்ளுகிறார்கள். கதை, கவிதை, கட்டுரை என தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
புத்தகம் வெளியிட விரும்புபவர்கள் தாங்களே புத்தகம் வெளியிடக்கூடிய வசதியை அமேசான் நிறுவனம் ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. இந்த வசதி எழுத்தாளர்களுக்கெல்லாம் வரப்பிரசாதம்.
எழுத்தாளர்கள் தாங்களே நேரடியாக அமேசானில் இ-புத்தகங்களை பப்ளிஷ் செய்ய முடியும். அமேசான் தளத்தில் அவை விற்பனைக்கும் வைக்கப்படும். விற்பனைக்கு ஏற்ப அமேசானில் இருந்து ராயல்டியும் நேரடியாக உங்கள் வங்கி அக்கவுண்ட்டுக்கே வந்துவிடும்.
தாங்கள் எழுதுவதை எப்படி இ-புத்தகமாக மாற்றுவது, எப்படி அமேசானில் அப்லோட் செய்வது, எப்படி விற்பனைக்கு வைப்பது, எப்படி ராயல்டி கிடைக்கும் என்பது போன்ற பல எப்படிக்களுக்கு இந்தப் புத்தகத்தில் விடை உள்ளது.
இந்த புத்தகம் Step by Step ஆக உங்களை வழிநடத்திச் செல்லும். ஏராளமான விளக்கப்படங்களும் அதற்கான விளக்கங்களும் மல்டிமீடியா புத்தகம்போல கைப்பிடித்து அழைத்துச் செல்லும். அப்படியே பின்பற்றிச் சென்றால் எழுத்தாளரான நீங்கள் பதிப்பாளராகவும் மாறிவிடமுடியும்.
அமேசானில் இ-புத்தகம் வெளியிட்டு உலகம் முழுவதும் கடை விரித்து விற்பனை செய்ய முடிவதனால் ஒரு புத்தகத்திலேயே கோடீஸ்வரர் ஆகிவிடலாம் என்றெண்ணி விட வேண்டாம்.
இங்கு இ-புத்தகம் வெளியிடும்போது நீங்கள் தான் எழுத்தாளர், பிழைத் திருத்துனர், வடிவமைப்பாளர், பதிப்பாளர், விற்பனையாளர். எனவே ஒவ்வொன்றிலும் கவனமாக இருக்க வேண்டும். விற்பனை செய்ய இடம் கொடுக்கிறது அமேசான் நிறுவனம். அதற்குறிய கட்டணத்தை எடுத்துக்கொண்டு மீதியை ராயல்டியாக கொடுக்கிறது. இதுதான் லாஜிக்.
இங்கும் புத்தக விற்பனை என்பது அத்தனை சுலபமல்ல. ஏற்கெனவே நீங்கள் எழுத்தாளர் என்ற முத்திரை பெற்று வாசகர்களிடம் பிரபலமாகியிருந்தால் (மட்டுமே) உங்கள் புத்தகம் வெளிப்படும் வெப்பக்கத்துக்கு நிறைய வாசகர்கள் வந்து செல்வார்கள் என்பதையும் நினைவில் வையுங்கள்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
அக்டோபர் 27, 2019