மகிழ்ச்சியின் பாஸ்வேர்ட் என்ன தெரியுமா?
மகிழ்ச்சிக்குக் கூட பாஸ்வேர்ட் உண்டா என வியக்கிறீர்களா? நிச்சயம் உண்டு. நம் தவறுகளை நாம் சரி செய்துகொள்ளும் ஒரு சூழல் வாய்க்கப்பெறுமாயின் அதுவே நம் மகிழ்ச்சிக்கான பாஸ்வேர்ட்.
வாழ்க்கையில் நம் எல்லோருக்குமே அவரவர்களின் ப்ளஸ் மைனஸ் நன்றாகவே தெரியும். ஆனால் ஓடுகின்ற ஓட்டத்தில் அதை கண்டுகொள்ளாமல் உதறிவிட்டு சென்றுகொண்டிருக்கிறோம் என்பதே உண்மை. ப்ளஸ்ஸை கண்டுகொண்டால் நம்மை நாமே உற்சாகப்படுத்திக்கொள்ள முடியும். மைனஸை கண்டுகொண்டால் நாம் இன்னும் சிறப்பாக வாழ முடியும். வாழும் காலத்திலேயே இதை உணர முடிந்தால் இன்னும் சிறப்பு.
ஏதேனும் ஒரு கட்டத்தில் நாம் எல்லோருமே நான் இப்படி இருந்ததால் மகிழ்ச்சியாக இருந்தேன் என பெருமைப்படவும், இப்படி இல்லாததால் சற்றே சறுக்கினேன் என நினைத்துப் பார்க்கும் ஒரு கட்டம் வரும். அந்த காலகட்டத்தில் வீழ்ச்சியை நினைத்து பெரிதாக வருந்தாமல் இளம் வயதிலேயே சின்ன சின்ன தவறுகளை நிவர்த்தி செய்துகொள்ள, வயதில் பெரியோர்களின் அனுபவங்களை தொகுக்கும் முயற்சியில் உள்ளேன்.
அவர்கள் வாழ்க்கையில் ‘இப்படி இருந்தேன் அதனால் சந்தோஷமாக இருந்தேன், ‘அப்படி செய்யாததால் இப்போது வருந்துகிறேன்’என்று அவர்களே அவர்கள் அனுபவங்களை பதிவு செய்யும் நோக்கத்தில் ‘மகிழ்ச்சியின் பாஸ்வேர்ட்’ என்ற ஒரு வீடியோ தொடரை ஆரம்பித்துள்ளேன்.
ஒவ்வொரு வீடியோவும் பெரியோர்களின் அறிமுகம், அவர்கள் வாழ்க்கையில் கற்றுக்கொண்ட ஒரு ப்ளஸ், சரிசெய்துகொள்ள தவறவிட்ட ஒரு மைனஸ் என மூன்று பகுதிகள் மிக சுருக்கமாக 5 நிமிடங்களுக்குள் மட்டுமே இருக்கும்.
அந்த வீடியோக்களை எங்கள் காம்கேரின் யு-டியூப் சேனலில் வெளியிடுகிறேன்.
எங்கள் காம்கேர் யு-டியூப் சேனலை சப்ஸ்க்ரைப் செய்து கொண்டால் வீடியோக்களை மிஸ் செய்யாமல் பார்க்கலாம்.
https://www.youtube.com/watch?v=0X9oD8jsioA
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
ஜூன் 30, 2020