ஜம்முனு வாழ காம்கேரின் OTP-25: புத்தகங்களை அன்பளிப்பாகக் கொடுக்கலாமே!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 25
ஜனவரி 25, 2021

புத்தகங்களை அன்பளிப்பாகக் கொடுக்கலாமே!

இன்றுடன் 756 நாட்கள், 2019 ஜனவரி முதல் தேதியில் இருந்து!

நாள் தவறாமல் காலை 6 மணியைக் காட்ட கடிகாரமே மறந்தாலும் என்னுடைய பதிவுகள் ‘டான்’ என்று காலை 6 மணிக்கு ஃபேஸ்புக்கில் ஆஜராகிவிடும்.

இதையெல்லாம் நான் சொல்லி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. தினமும் நீங்கள் அனைவரும்தான் படித்து விடுகிறீர்களே!

அப்படித்தான் தினமும் காலை பிரம்ம முகூர்த்தத்தை கடிகாரம் காட்ட மறந்தாலும் எனக்கு  ‘டான்’ என்று 3 மணிக்கு விழிப்புக் கொடுத்துவிடும், இரவு எத்தனை மணிக்கு உறங்கச் சென்றிருந்தாலும். இதுவும் என் சிறுவயது பழக்கம்.

என் பிசினஸ் பேஜில் இருந்து எத்தனை பேர் என் பதிவுகளை வாசிக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள முடியும். தினமும் சில ஆயிரம் பேர் வாசிக்கிறார்கள், சில நூறு பேர் லைக் செய்கிறார்கள். சிலர் பின்னூட்டமிடுகிறார்கள். பெரும்பாலும் (விதி விலக்குகளை வணங்குகிறேன்) பொழுதுபோக்குக்காக  வந்து செல்லும் ஃபேஸ்புக்கில் பக்கம் பக்கமாக எழுதும் என் எழுத்துக்கு இந்த கணக்கு பெரும் சாதனைதான்.

இப்படி தினந்தோறும் எழுதுவதை யாருமே செய்யாத செயற்கரிய செயல் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ஏனெனில் இதற்கு முன்பே  ஒருவர் தன் பத்து வயதில் இருந்து தினமும் எழுதி வருகிறார்.

அப்படியா, யார் அவர் என வியந்து யோசிக்க வேண்டாம். அந்த நபர் அடியேன்தான்.

என் பத்து வயதில் கோகுலத்தில் ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற முதல் கதை வெளியான நாளில் இருந்து தினமும் எழுதுவது என்பது நான் தொடர்ச்சியாக  செய்துவரும் செயல். அதனால் எனக்கு இது அதிசயமான செயல் அல்ல. இன்று சமூக வலைதளங்கள் இருப்பதால் அவை உங்கள் பார்வைக்கு சுடச்சுடக் கிடைக்கிறது.

எப்படி தினமும் சாப்பிடுகிறோமோ, தூங்குகிறோமோ அப்படி எழுதுவதும் என் நித்தியப்படி செயல். யாரையாவது பார்த்து ‘எப்படி இப்படி மூச்சு விடுகிறீர்கள் தொடர்ச்சியாக…’ என்று அதிசயிக்க முடியுமா?

அப்படித்தான் எனக்கு எழுத்து சுவாசம் போல.

எழுத்து என்பது வெறும் எழுத்தல்ல. கற்பனை, கிரியேட்டிவிட்டி, புத்திசாலித்தனம், வாழ்க்கைப் பற்றிய புரிதல், அன்பின் பண்பின் வெளிப்பாடு, பெற்றோரை மதித்தல், வாழ்வியல், அசாத்திய நம்பிக்கை, தன்னம்பிக்கையின் உச்சம், நேர்மறை சிந்தனை என பல பரிணாமங்களின் வெளிப்பாடே எனது எழுத்து.

எண்ணம் சொல் செயல் மூன்றும் ஒன்றாக சங்கமிக்கும்போதுதான் என் எழுத்து இறைசக்தி பெறுகிறது. அதனாலேயே என் எழுத்தில் போலித்தனம் இல்லாமல் இருக்கிறது.

என் எழுத்து என்பது புத்தகம், அனிமேஷன், ஆவணப் படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பல்வேறு அவதாரங்கள் எடுத்து புத்தகங்கள், ஆடியோ, வீடியோ என புதுப்புது கோணங்களில் தன்னைத் தானே அழகுபடுத்திக்கொண்டு வெளிப்படுத்தி வருகிறது.

இது இறைவன் கொடுத்த வரம். நான் அந்த வரத்தை சரியாகப் பயன்படுத்துகிறேன். அவ்வளவுதான்.

இப்படி, ஒவ்வொருவருக்கும் கடவுள் ஏதோ ஒரு வரத்தைக் கொடுத்திருப்பார். ஒருசிலருக்கு அந்த வரம் தம்மிடம் இருப்பதே தெரியாது. ஒருசிலர் அதை அலட்சியப்படுத்தி ஒதுக்கி வைக்கிறார்கள். ஒருசிலர் அதை சரியாகப் பயன்படுத்துகிறார்கள்.

நான் மூன்றவாது பிரிவு. எனக்களித்த வரத்தைக் கொண்டாடுகிறேன். அவ்வளவே.

சரி விஷயத்துக்கு வருகிறேன்.

756 நாட்களாக நான் எழுதி வந்த பதிவுகளை வாழ்வியல், தன்னம்பிக்கை, நேர்மறை சிந்தனை, வேலை வாய்ப்புகள், தொழில் வாய்ப்புகள், குழந்தை வளர்ப்பு, தொழில்நுட்பம் என பல்வேறு தலைப்புகளாக பிரித்து காம்கேரின் OTP வரிசை நூல்கள் என்ற வரிசையில் குறைந்த விலை புத்தகங்களாக வெளியிட நினைத்துள்ளேன்.

அதன் முதன் முயற்சியாக நேற்று ‘வாழ்க்கையின் அப்பிடைசர்’ என்ற தலைப்பில் அமேசானில் இ-புத்தகம் வெளியிட்டுள்ளேன். விலை 49 ரூபாய் மட்டுமே. 25 கட்டுரைகளை உள்ளடக்கியது.

லிங்க்: https://www.amazon.in/dp/B08TV2JJB4

இனி வரும் காலம் எல்லாமே டிஜிட்டலில்தான் எனும்போது புத்தகங்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?

என் பதிவுகளை உண்மையிலேயே உங்கள் எதிர்கால சந்ததியினருக்கு பொக்கிஷமாக்க நினைப்பவர்கள் இ-புத்தகங்களை வாங்கி இளையதலைமுறையினருக்குப் பரிசளியுங்கள். நீங்களும் வாங்கி டிஜிட்டல் ஷோகேஸில் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

அமேசானில் இ-புத்தகம் வாங்குபவர்கள் அதை அன்பளிப்பாக கொடுக்கவும் அந்த இணையதளம் வழிவகை செய்துள்ளது. அந்த வசதியை பயன்படுத்துங்கள். யாருக்கேனும் பரிசளிக்க விரும்பினால் இ-புத்தகங்களைப் பரிசளியுங்கள். நினைத்த மாத்திரத்தில் ஆன்லைனில் கட்டணம் செலுத்திய சில நொடிகளில் உங்கள் அன்பளிப்பு சம்மந்தப்பட்டவரின் டிஜிட்டல் சாதனத்துக்குச் சென்றுவிடும்.

மொபைலில் ஃபேஸ்புக் பதிவுகளைப் படிப்பதைப் போல இ-புத்தகங்களை மிக எளிமையாக சுலபமாக படிக்கலாம்.

மொபைலில் ஃபேஸ்புக் ஆப்பை இன்ஸ்டால் செய்திருந்தால்தானே ஃபேஸ்புக் பதிவுகளைப் படிக்க முடியும். அதுபோல மொபைலில் கிண்டில் ஆப்பை இன்ஸ்டால் செய்திருந்தால் அமேசானின் வெளியாகும் இ-புத்தகங்களை வாசிக்கலாம். அவ்வளவுதான். ரொம்ப ஈசி.

என்ன புத்தகம் பரிசளிக்க கிளம்பிட்டீங்களா?

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 23 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon