ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 72
மார்ச் 13, 2021
நமக்கும் மேலே ஒரு சக்தி இருக்கு
ஒத்துக்கறீங்களா?
அப்படின்னா இதையும் நீங்கள்
ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்!
ஒரு விஷயம்
உங்களுக்குக் கிடைக்கவில்லை என்றால்
அல்லது
அதில் உங்களுக்கு விருப்பமில்லை என்றால்
அது இல்லாமலேயே
உங்களால் வாழ்ந்துவிட முடியும் என்று
அந்த சக்திக்கு நன்றாகத் தெரியும்
அதனால்கூட இருக்கலாம்!
அது என்ன ‘கூட’
அதனால் மட்டுமே அப்படி நடக்கிறது!
அந்த ஒரு விஷயம்
அன்பாக இருக்கலாம்
பணமாக இருக்கலாம்
விருதாக இருக்கலாம்
பதவி பட்டமாக இருக்கலாம்!
விடுங்கள்…
அது என்ன பெயரில் வேண்டுமானலும்
இருந்துவிட்டுப் போகாட்டும்!
உங்களைவிட தகுதியில் குறைந்தவருக்கு
மேலே சொன்ன விஷயங்களில் ஒன்றிரண்டு
கூடுதலாகக் கிடைக்கிறது என்றால்
அவருக்கு அவை இல்லை என்றால்
வாழ முடியாது என்பதும்
அந்த சக்திக்கு நன்றாகத் தெரியும்
அதனால்கூட இருக்கலாம்!
அது என்ன ‘கூட’
அதனால் மட்டுமே அப்படி நடக்கிறது!
வீட்டில்
நம் அம்மா
தன் குழந்தைகளில்
நோஞ்சான் குழந்தைக்கு
கொஞ்சம் பாலும் சத்துருண்டையும்
அதிகமாகக் கொடுக்கிறாள் என்றால்…
அவளுக்கு அந்த நோஞ்சான் குழந்தையைத்தான்
பிடிக்கும் என்று அர்த்தம் கிடையாது
அந்தக் குழந்தைக்குத்தான் ஊட்டச்சத்து அதிகம் வேண்டும்
இல்லை என்றால் அதனால் ஜீவித்திருக்க முடியாது
என்பதால்கூட இருக்கலாம்!
அது என்ன ‘கூட’
அதனால் மட்டுமே அப்படி நடந்துகொள்கிறாள்!
திருமணம் சாதனை செய்வதற்கு தடைக்கல் என்று
ஒரு பெண் சொல்லவே மாட்டாள்
ஏன் எனில் அவளுக்குத் தெரியும்
திருமணத்துக்கும் சாதனைக்கும்
எந்த சம்மந்தமும் இல்லை என்று…
அவள் அப்படி சொல்கிறாள் என்றால்
அவளுக்கே ஆழ்மனதில்
சாதனைகள் செய்ய வேண்டும்
என்ற விருப்பம் இல்லாமல் இருக்கும்
என்பதே நிதர்சனம்
அடிப்படையில் அவள்
சோம்பேறியாகக் கூட இருக்கலாம்!
அது என்ன ‘கூட’
அதனால் மட்டுமே அவள் அப்படி சொல்கிறாள்!
கருங்கற்களில் இடையே
தவறி விழுந்த ஒரு சிறு விதை
கிடைக்கின்ற ஒரு சொட்டு
மழை நீரை வாழ்வாதாரமாக்கிக்கொண்டு
முளைத்து வருவதைப் பார்த்திருப்பீர்கள்
அதுபோல் தான் பெண்களும்!
அப்படி தனக்குக் கிடைக்கும்
சிறு துளியையும் பெருவெள்ளமாக்கிக்கொள்ளும்
கட்டற்ற ஆற்றலைப் பெற்றதால்கூட
அவளால் தன்னளவில் ஏதேனும் ஒரு விஷயத்தை
சாதனையாக்கிக் காட்டுகிறாள்போல!
அது என்ன ‘கூட’
அதனால் மட்டுமே அவளால்
பெருஞ்சாதனைகள் செய்ய முடிகிறது!
பெண்கள்…
திருமணம் செய்திருந்தாலும், செய்யாவிட்டாலும்,
கணவன் சரி இருந்தாலும், சரி இல்லை என்றாலும்,
விவாகரத்து ஆகி இருந்தாலும், விட்டுப் பிரிந்திருந்தாலும்
எப்படி இருந்தாலும்
பெண்கள் தங்கள் திறனால்
தன்னையும் தன்னைச் சார்ந்த
குடும்பத்தையும் மேம்படுத்துவாள்
அந்த அற்புத சக்தியை இயற்கையே
அவர்களுக்குக் கொடுத்திருக்கிறது
அதனால்கூட அவளால்
அற்புதங்களை நிகழ்த்த முடிகிறது எனலாம்!
அது என்ன ‘கூட’
அதனால் மட்டுமே நித்தம்
அவள் அற்புதங்களை நிகழ்த்துகிறாள்!
‘ஒன்றானவள்’ என்ற தலைப்பில்
என்னைப் பற்றிய குறிப்பொன்றை
விகடகவியில் வெளியான
கட்டுரையில் சேர்த்திருந்தார்கள்!
மேதகு அவ்வையார்
மேதகு அன்னை தெரசா
மேதகு இந்திராகாந்தி
மேதகு ஜெயலலிதா
மேதகு சாந்தா
மேதகு அப்துல்கலாம்
வரிசையில்
என்னையும் சேர்த்து
உயர்த்தி இருந்தார்கள்!
அதன் தாக்கத்தில்கூட இந்தக் கவிதை
எழுதப்பட்டிருக்கலாம்!
அது என்ன ‘கூட’
அதனால் மட்டுமே இந்தக் கவிதை!
(’ஒன்றானவள்’ படிக்காதவர்கள் இங்கு சென்று படிக்கலாம்: )
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software
#காம்கேர்_OTP, #COMPCARE_OTP
#காம்கேர்_கவிதை #COMPCARE_Kavithai