ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 71
மார்ச் 12, 2021
மனம் எனும் அவசரக்குடுக்கை!
மனதுக்கு இயல்பாகவேத் தெரிகிறது
சந்தோஷம் என்றால் கொண்டாட வேண்டும்
வருத்தம் என்றால் சோகப்பட வேண்டும்
என்று!
அப்படித்தான் நாம் பழக்கி உள்ளோம்
அல்லது
பழகி உள்ளோம்!
சரிதான்…
நல்ல விஷயம்தான்!
மனதுக்குக் கற்றுக்கொடுத்துள்ளோம்
சின்னச் சின்ன சந்தோஷங்களுக்கும்
மகிழ்ச்சியாக இருந்தால் – அதைக்
கொண்டாடி மகிழ்ந்தால்
வாழ்க்கை நன்றாக இருக்கும்
என்று!
நம் மனம் நம்மைவிட
அவசரக்குடுக்கை…
அதனால்தான் அடுத்த வரியை கற்றுக்கொடுப்பதற்குள்
அவசரகுடுக்கைத்தனமாக
‘குதிரைக்குக் குர்ரம் என்றால் யானைக்கு அர்ரம்’ என்று
சின்னச் சின்ன வருத்தங்களுக்கும் சோகப்படுகிறதே!
அது என்ன அடுத்த வரி?
மனதைப் பொருத்தவரை
சந்தோஷம் என்றால்
கொண்டாடி சந்தோஷிக்கும்
எனவே
சின்ன சின்ன சந்தோஷத்தையும் கொண்டாடு
வாழ்க்கை இனிக்கும் என்று கற்றுக்கொடுத்தோம்
‘கப்’பென பிடித்துக்கொண்டுவிட்டது!
வருத்தம் என்றால்
சோகப்பட்டு தன்னுள் சுருண்டுகொள்ளும்
எனவே
பெரிய பெரிய வருத்தங்களைக் கூட புறம்தள்ளு
வாழ்க்கை சொர்க்கமாகும் என்று கற்றுக்கொடுப்பதற்குள்
எனக்குத்தான் தெரியுமே
என அவசரக்குடுக்கையாய்
சின்ன சின்ன வருத்தங்களுக்கும் சோகப்பட்டு சுருள்கிறது!
‘சின்ன சின்ன’ என்ற பக்குவம்
இடத்துக்கு இடம்
செயலுக்கு செயல்
மாறுபடும்!
மனதுக்குத் தெரியுமா?
அந்த சின்ன சின்ன வேறு
இந்த சின்ன சின்ன வேறென்று!
யாராவது சொல்லிக்கொடுங்களேன்
என்று காத்திருக்காமல்
நீங்களாகவே கற்றுக்கொடுத்துவிடுங்கள்
சின்ன சின்ன சந்தோஷங்களையும் கொண்டாடி மகிழ்ந்தால்
பெரிய பெரிய வருத்தங்களையும் புறந்தள்ளி ஒதுக்கினால்
வாழ்க்கை சொர்க்கத்தின் சொர்க்கமே!
மனம் மேஜிக் செய்யும்தான்
நாம்தான் மேஜிக் செய்யக் கற்றிருக்க வேண்டும்
மனதை ஆளும் மேஜிக்கை!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software
#காம்கேர்_OTP, #COMPCARE_OTP
#காம்கேர்_கவிதை #COMPCARE_Kavithai