ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 76
மார்ச் 17, 2021
எலிகள் ஏன் சிங்கத்தைப் பார்த்து பயப்படுவதில்லை?
நாம் பூனையைப் பார்த்து பயப்படுவதில்லை
சிங்கத்தைக் கண்டால் பயம்தான்!
ஆனால்
எலிகள் ஒருபோதும்
சிங்கத்தை வலிமையானது
என ஒத்துக்கொள்வதே இல்லை!
பூனையைவிட சிங்கம்
வலிமையனது என்று நமக்குத் தெரியும்!
ஆனால்
எலிகளுக்கு அது தெரியாது, புரியாது அதனால்
அதை ஒத்துக்கொள்ளவும் செய்யாது!
பூனையைவிட சிங்கம்
ஆபத்தானது என்று நமக்குத் தெரியும்!
ஆனால்
எலிகளின் கண்களோ பூனை வரும் திசையிலும்
பூனையின் காலடி சப்தத்திலுமே!
சிங்கம் கூண்டை விட்டு வெளியில் வந்தால்
நம்மை துவம்சம் செய்துவிடும் என்று
நமக்கு நன்றாகவே தெரியும்!
ஆனால்
எலிகளின் கவனமோ
பூனையின் கவனத்துக்குள் சிக்காமல்
தப்பிவிட வேண்டும் என்ற
ஒற்றை இலக்கில் மட்டுமே!
காரணம்…
பூனைகளுக்கு எலிகள்தான் பரம விரோதி
கண்டால் துண்டாக்காமல் விடாது என்பதால்
எலிகளைப் பொருத்தவரை
பூனைதான் பலசாலி!
இதுபோல்தான் நம் மக்களில்
பெரும்பாலானோர்!
சிலர் எலிகளாக, பலர் பூனைகளாக
இன்னும் ஒருசிலரோ பலரோ சிங்கங்களாக!
தமக்கு சாதகமாக இருப்பவர்கள்
தன் உயிர் நண்பருக்கு துரோகமே செய்தாலும்
அவரைக் கொண்டாடுகிறார்கள்!
நட்பாவது துரோகமாவது
இன்று எல்லாமே
சுயநலம் என்ற போர்வைக்குள்!
அதற்காக எலிகளுக்கு
பாடம் எடுக்க முடியுமா என்ன?
சிங்கம் பயங்கரமான மிருகம்
பார்த்து நடந்துகொள் என்று!
என்றாவது சிங்கத்துக்கு உணவு கிடைக்காதபோது
அது எலியையும் வேட்டை ஆடத்தான் செய்யும்!
அப்போதுதான் அதற்குத் தெரியும்
சிங்கமும் பயங்கரமானது என்று!
ஆனால் அது
காலம் கடந்த சிந்தனை!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software
#காம்கேர்_OTP, #COMPCARE_OTP
#காம்கேர்_கவிதை #COMPCARE_Kavithai