தினம் ஒரு புத்தக வெளியீடு[2]: கொண்டாட்ட நாள்-2

தினம் ஒரு புத்தக வெளியீடு – வெர்ச்சுவல் நிகழ்ச்சி –  கொண்டாட்டம் –  நாள் 2!

நாள்: பிப்ரவரி 24, 2021

இடம்: இந்த நிகழ்ச்சியை 2021 புத்தகக் காட்சி நடைபெறும் 14 நாட்களும் (பிப்ரவரி 24, 2021 முதல் மார்ச் 9, 2021 வரை) தினமும் ஒரு நூலை அமேசானில் வெளியிடுவதாக ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சியை 14 நாட்களும் வெர்ச்சுவலாக ஆன்லைனில் நடத்துகிறேன். ஃபேஸ்புக்கும், காம்கேர் டிவியுமே நிகழ்ச்சி மேடை.

சிறப்பு விருந்தினர்: உயர்திரு. நந்தா

சிறப்பு விருந்தினர் குறித்து!

அறுபத்தி ஐந்து ஆண்டுகளாக கலைஞன் பதிப்பகம் மூலம் இலக்கியம் சம்மந்தமான புத்தகங்களையும், நாற்பது ஆண்டுகளாக அநுராகம் பதிப்பகம் மூலம் கலை சம்மந்தமான புத்தகங்களையும் தன் தந்தை திரு. மாசிலாமணி அவர்கள் வெளியிட்டு வந்ததாகவும் அவருடன் இணைந்து அந்தப் பணியை செய்து வந்தவர் அவரது மறைவுக்குப் பிறகு தான் அந்தப் பணியைத் தொடர்வதாகவும் சொல்கிறார்.

இவர்கள் மலேஷியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள பல்கலைக் கழகத்துடன்  தொடர்புள்ளவர்கள். அவர்களுடன் இணைந்து கருத்தரங்கு நடத்தி புத்தகங்கள் வெளியிடுதல், மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி விருதளித்தல் என பரபரப்பாக இயங்கி வருபவர்கள்.

1996-ம் ஆண்டு மங்கையர் மலரில் ‘உலகம் உன் கையில்’என்ற தொழில்நுட்பத் தொடரை ஓராண்டு காலம் எழுதி வந்தேன். இந்தத் தொடரை படித்த திரு. நந்தா அவர்கள் தன் மனைவியுடன் என் நிறுவனத்துக்கு நேரில் வந்து என்னை சந்தித்து, அதை புத்தகமாக கொண்டு வரலாமா என  கேட்டபோது மறுக்கவில்லை. அதுவே ‘இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி ஓர் அறிமுகம்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியானது. அந்த வருட புத்தகக் கண்காட்சியில் சேல்ஸிலும் வெற்றிபெற்றது. அதுவே நான் எழுதிய முதல் தொழில்நுட்பப் புத்தகம்.

தொடர்ச்சியாக தமிழில் கம்ப்யூட்டர் சம்மந்தப்பட்ட Languages, Packages காக நான் புத்தகம் எழுதிக் கொடுக்க அவரது அநுராகம் பதிப்பகம் வாயிலாக புத்தகங்கள் வெளிவர ஆரம்பித்தன.

கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தை (கல்வி சம்மந்தமான கம்ப்யூட்டர் லேங்குவேஜ்கள் மற்றும் பேக்கேஜ்கள்) முதன் முதலில் புத்தகமாக தமிழில் கொண்டு வந்தது என் எழுத்தில் இவரது பதிப்பகம் என்பது தனிச் சிறப்பு.

நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்தப் புதுமையான வெர்ச்சுவல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாராட்டிப் பேசி பொதுவில் பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் சார்.

இனி இவரின் உரை இவரது வார்த்தைகளில்…

// சாதனை பெண்மணி காம்கேர் புவனேஸ்வரியின்  ‘தினம் ஒரு புத்தக வெளியீட்டுத் திட்டம்’ –  வெர்ச்சுவல் நிகழ்ச்சி!

தினம் ஒரு புத்தக வெளியீட்டுத் திட்டத்தின் கீழ் 2021 புத்தகக் காட்சி நடைபெறும் 14 நாட்களும் அமேசானில் வெளியிடும் புதிய முயற்சியை காம்கேர் கே. புவனேஸ்வரி அறிமுகப்படுத்தி உள்ளார்.  அச்சுப் புத்தகமாக வெளியிட்டுக் கொடுக்கவும் திட்டம் உண்டு என்கிறார்.

28 வருடங்களாக காம்கேர் சாஃப்ட்வேர் என்ற ஐடி நிறுவனத்தை நடத்தி வரும் இவருக்கு ஐ.டி நிறுவன CEO, தொழில்நுட்ப வல்லுநர், கிரியேடிவ் டைரக்டர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர், எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர், தன்னம்பிக்கைப் பேச்சாளர் என பன்முகம் உண்டு.

125-க்கும் மேற்பட்ட தொழில்நுட்பம், வாழ்வியல் புத்தகங்கள் எழுதியுள்ள இவரது தொழில்நுட்பப் புத்தகங்கள் பல்வேறு பல்கலைக்கழகங்களில் ஆய்வு நூல்களாகவும், சமூக  செயல்பாடுகளுக்கு உதவும் நிகழ்ச்சிகளுக்கான பாடதிட்டமாகவும் உள்ளன.

இவரது  தொழில்நுட்ப தயாரிப்புகளை கருவாக வைத்து ஆராய்ச்சி செய்து Ph.D பட்டம் பெற்று உள்ளார்கள்.

ஆஸ்திரேலியா, ஜப்பான், சிங்கப்பூர், மலேஷியா,  ஸ்ரீலங்கா, ரஷ்யா நாடுகளிலுள்ள  நூலகங்களில் இவரது  புத்தகங்கள் இடம்பெற்று பெற்றுள்ளன.

1996-ம் ஆண்டு வெளி வந்த இவரின் மங்கையர் மலர் தொழில்நுட்பத் தொடரை அநுராகம் பதிப்பகம் மூலம் ‘இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி’ என்று வெளியிட்டோம். இவரின் முதல் தொழில்நுட்பப் புத்தகம் அது.

தமிழில் அதிக அளவில் தொழில் நுட்பங்களுக்காக புத்தகங்கள் எழுதியவர்.  பல்கலைக்கழகங்களில் அதிக அளவில் பாடதிட்டமாக  இருப்பது இவரது தொழில்நுட்பப் புத்தகங்களே.

இவரின் ‘தினம் ஒரு புத்தக வெளியீடு’ திட்டத்தின் முயற்சியை  அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்த்துகள்.

நந்தா
அநுராகம், கலைஞன் பதிப்பகம்
பிப்ரவரி 24, 2021 //

வாசகர்களாகிய உங்கள் அனைவரின் பேரன்புடன் என் தொழில்நுட்பப் பயணத்தில் எழுத்துப் பயணத்தையும் இணைத்துக்கொண்டு தொடர்கிறேன்.

என் எழுத்தை வாசிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் அன்பு நன்றிகள்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software
பிப்ரவரி 24, 2021

#காம்கேர்_OTP #COMPCARE_OTP
#காம்கேர்_புத்தகம் #compcare_book
#Daily_a_Book_Release_Virtual_Event

(Visited 30 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon