தினம் ஒரு புத்தக வெளியீடு[6]: கொண்டாட்ட நாள்-6

தினம் ஒரு புத்தக வெளியீடு – வெர்ச்சுவல் நிகழ்ச்சி –  கொண்டாட்டம் –  நாள் 6!

நாள்: மார்ச் 8,  2021

இடம்: இந்த நிகழ்ச்சியை 2021 புத்தகக் காட்சி நடைபெறும் 14 நாட்களும் (பிப்ரவரி 24, 2021 முதல் மார்ச் 9, 2021 வரை) தினமும் ஒரு நூலை அமேசானில் வெளியிடுவதாக ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சியை 14 நாட்களும் வெர்ச்சுவலாக ஆன்லைனில் நடத்துகிறேன். ஃபேஸ்புக்கும், காம்கேர் டிவியுமே நிகழ்ச்சி மேடை.

சிறப்பு விருந்தினர்: உயர்திரு. கமலா முரளி

சிறப்பு விருந்தினர் குறித்து!

கமலா முரளி –  28 வருடங்களாக ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்திருக்கிறார். நேர்மையானவர். கடுமையான உழைப்பாளி.   ‘சிறந்த ஆசிரியர்’ என்ற விருதையும் பெற்றிருக்கிறார். ஆங்கில ஆசிரியராக இருந்தாலும் தமிழிலும் அலாதி பிரியம் உண்டு. கதை கவிதை எழுதுவதில் ஆர்வம் உண்டு. நேரம் கிடைக்கும்போது எழுதியும் வருகிறார்.

2019-ல் இருந்து ஃபேஸ்புக்கில் நான் எழுதி வரும் விடியற்காலை பதிவுகளை நாள் தவறாமல் படித்து வருபவர். இந்தத் தொடர் ஆங்கிலத்திலும் வந்தால் பள்ளி கல்லூரி மாணவர்களையும் சென்றடையும் என்பதை வலியுறுத்திக்கொண்டே இருப்பார்.

என்னுடைய இந்தப் பதிவுகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் சில பள்ளி கல்லூரிகளுக்கு அவர்கள் வாட்ஸ் அப் குழுமத்தில் தினந்தோறும் சென்றுகொண்டிருக்கின்றன. விரைவில் இவற்றை பாடத்திட்டமாக  வைப்பதற்காகவும் பேசி வருகிறார்கள்.

தொழில்நுட்ப ரீதியாக அப்டேட் செய்துகொண்ட இவரை நினைத்தால் பெருமிதமாக இருக்கிறது. அன்பு நன்றிகள் மேடம்.

இனி உயர்திரு. கமலா முரளி அவர்களின் உரை அவரது வார்த்தைகளில்…

நானறிந்த கணிணித்துறை மேதை!

கண்களில் மிளிரும் தெளிவு, எண்ணங்களிலும் சொற்களிலும் பிரதிபலிக்கும்!

எண்ணங்களின் தெளிவு கண்களில் தெரிகிறது எனத்தான் சொல்லவேண்டும்!

ஆனாலும் மேடம் காம்கேர் புவனேஸ்வரி அவர்களை நினைக்கையில் முதலில் என் மனம் அவரது கம்பிரமான, தெளிவான முகத்தினைப் பற்றித் தான் நினைக்கும்!

தினமும் அவரது பதிவுகளைப் படிப்பது எனது காலை நேரப் பணியாகவே மாறிவிட்டது எனச்  சொன்னால் மிகையாகாது.

கனவுச்சொற்களை, கடவுச்சொற்களாக வடிவமைத்துத் தரும் தங்கச்சுரங்கம் மேடம் காம்கேர் புவனேஸ்வரி அவர்களின் எழுத்துகள்!

மிக நுணுக்கமான  வாழ்வியல் படிப்பினைகளை, சுவாரசியமாகவும், சுருக்கமாகவும், நாசுக்காகவும், நாகரீகமான சொற்களாலும் அவர் எழுதும் கட்டுரைகளும், பதிவுகளும் எனை மிகவும் ஈர்க்கின்றன.

கணிணி தொழில்நுட்பத் துறையில், அவருடைய பங்களிப்புகள் ஒவ்வொன்றும் ”வெற்றிகரமான முன்னோடி முயற்சிகள்” (pioneering) என்பதை அனைவரும் அறிவர்.

அந்த வகையில், புத்தகத் திருவிழாவில், “தினம் ஒரு மெய்நிகர் புத்தக வெளியிடு” என்ற ஒரு அரிய முயற்சியையும் மேடம் காம்கேர் புவனேஸ்வரி மிக வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார்.

“வீட்டிலிருந்தே வேலை” என்ற தத்துவத்தை பல ஆண்டுகளுக்கு முன்னேரே தனது நிறுவன பொறியியல் வல்லுநர்களுக்கு அறிமுகப்படுத்தி, வெற்றிகரமாகச் செயல்படுத்தியவர்!

“அசைவூட்ட காணொளிகள்” (animation video)  தமிழில் பல ஆண்டுகளுக்கு முன்னரே உருவாக்கி அசத்தியவர்!

இன்று “மெய்நிகர் புத்தக வெளீயிட்டுத் திருவிழா” தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

மெய்யான உணர்வுகளை, தகவல்களை , மெய்யான உணர்வுடன் எழுதுவதில்  மேடம் காம்கேர் புவனேஸ்வரி, உங்களுக்கு நிகர் உண்டோ!

இணைய வழியில், புதுத்தடமாக “புத்தக வெளியீட்டுத் திருவிழா” பதிப்பித்து புதுமை சாதனை செய்வதிலும் தங்களுக்கு நிகர் உண்டோ?

ஒரு வாசகியாக,
ஒரு ஆசிரியையாக,
ஒரு சமுதாய நலவிரும்பியாக,
ஒரு பெண்ணாக…

தங்களின் புதுமைத்திட்டம்
“தினம் ஒரு மெய்நிகர் புத்தக வெளியீடு”
விழாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் !

பெண்கள் தின நன்னாள் வாழ்த்துகளுடன்,

கமலா முரளி
மார்ச் 8, 2021//

இவருடைய குரலிலேயே இவரது உரை: கமலா முரளியின் உரை

வாசகர்களாகிய உங்கள் அனைவரின் பேரன்புடன் என் தொழில்நுட்பப் பயணத்தில் எழுத்துப் பயணத்தையும் இணைத்துக்கொண்டு தொடர்கிறேன்.

என் எழுத்தை வாசிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் அன்பு நன்றிகள்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO

Compcare Software
மார்ச் 8, 2021

#காம்கேர்_OTP #COMPCARE_OTP
#காம்கேர்_புத்தகம் #compcare_book
#Daily_a_Book_Release_Virtual_Event

(Visited 15 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon