தினம் ஒரு புத்தக வெளியீடு – வெர்ச்சுவல் நிகழ்ச்சி – கொண்டாட்டம் – நாள் 7!
நாள்: மார்ச் 8, 2021
இடம்: இந்த நிகழ்ச்சியை 2021 புத்தகக் காட்சி நடைபெறும் 14 நாட்களும் (பிப்ரவரி 24, 2021 முதல் மார்ச் 9, 2021 வரை) தினமும் ஒரு நூலை அமேசானில் வெளியிடுவதாக ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சியை 14 நாட்களும் வெர்ச்சுவலாக ஆன்லைனில் நடத்துகிறேன். ஃபேஸ்புக்கும், காம்கேர் டிவியுமே நிகழ்ச்சி மேடை.
சிறப்பு விருந்தினர்: உயர்திரு. உமா மோகன்
சிறப்பு விருந்தினர் குறித்து!
புதுவை அகில இந்திய வானொலியில் முதுநிலை அறிவிப்பாளராக பணியில் இருக்கும் உயர்திரு. உமா மோகன் அவர்கள் ‘மாதம் ஒரு மங்கை முகம்’ என்ற நிகழ்ச்சியில் என்னைப் பேட்டி எடுத்து ஒலிபரப்பினார். அதுவே நேரடியான முதல் அறிமுகம். அதற்கு முன்னர் வெர்ச்சிவல் அறிமுகம் மட்டுமே.
என் பார்வையில் கவிதைகள் எழுதுதல் இவரது தனிச் சிறப்பு என்பேன். பொதுவாகவே ‘கிரியேட்டர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டால் அதை சமுதாய விழிப்புணர்வு நிகழ்வாக்கிவிடுவர்கள்’ என்று நான் நினைத்துக்கொள்வேன்.
அதற்கு ஆகச் சிறந்த உதாரணமானார் இவர். ஆம். இவர் கொரோனா காலத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது அதையே அழகு மிளிர எளிமையாக எல்லோருக்கும் புரியும் வண்ணம் விழிப்புணர்வு தகவல்களாகவும், கவிதைகளாகவும் ஃபேஸ்புக்கில் எழுதி வந்தார். அது இப்போது தனித்தொகுப்பாக புத்தகமாக வெளியாகியுள்ளது.
இவர் விழா தொகுப்பு,கவியரங்கம் ,உரையரங்கம் போன்ற மேடை பங்கேற்பு நிகழ்ச்சிகளில் ஆர்வம் உள்ளவர். தவிர பள்ளி,கல்லூரி மாணவர்களிடையே உரையாற்றுவது,மகளிர் விழிப்புணர்வு நிகழ்வுகளில் பங்கேற்பது ,சமூக விழிப்புணர்வுக் கட்டுரைகள் வரைவதில் என இவரது ஆர்வங்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றன. ஆர்வம் மட்டும் இல்லாமல் எல்லாவற்றையும் செயல்முறைபடுத்தியும் வருபவர். தன் படைப்புகளுக்கு விருதுகளையும் பெற்றுள்ளார்.
எப்போதுமே பரபரப்பாக இயங்கி வரும் இவருக்கு தன்னம்பிக்கையும் தைரியமும் மேலான குணங்கள் என்பேன்.
இத்தகு சிறப்புமிக்க இவரை நாங்கள் நடத்துகின்ற ‘தினம் ஒரு நூல் வெளியீடு’ வெர்ச்சுவல் நிகழ்ச்சியை அறிமுகம் செய்து வைக்க அழைத்தவுடன் கொஞ்சமும் தயங்காமல் ஒத்துக்கொண்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
இனி இவரின் உரை இவரது வார்த்தைகளில்…
//தினம் ஒரு புத்தக வெளியீடு’ – Virtual Event.
காம்கேர் என்ற சொல்லை தமிழ்நாட்டில் ஒரு அடையாளமாக்கிவிட்டவர் அன்புக்கும் மதிப்புக்குமுரிய புவனேஸ்வரி மேடம்.
அவ்வப்போது பத்திரிகைச்செய்தி, பேட்டிகள் வழி அறிந்திருந்தேன்.
முகநூலில் நட்பில் இணைந்தோம். இன்னும் நெருக்கமாக,அதிகமாக அறிந்துகொள்ளத் தொடங்கினேன்.
இவர் துறையோடு தொடர்பில்லாதவர்களுக்கும் தர்க்க ரீதியில் விளக்கம், விவரம் தரும் அழகில் லயித்திருக்கிறேன். எங்கள் நேயர்களுக்கு அறிமுகம் செய்ய மாதம் ஒரு மங்கை முகம் என்ற சிறப்பு நிகழ்ச்சியில் பேட்டி எடுத்து ஒலிபரப்பினோம்.அதன்வழி இன்னும் பல முகங்களை அறிந்தேன்.
எப்போதும் போல இப்போதும் பிரமிக்க வைக்கும் வேலை இப்போது இவர் செய்வதும்.
தினம் ஒரு நூல்!!!!
மலைக்க வைக்கும் வேலைகளை அனாயாசமாகச் செய்யும் காம்கேர் புவனேஸ்வரி அவர்களின் பதின்மூன்றாவது நூலை இந்த மகளிர் தினத்தில் இணையவழிவெளியிட அழைத்தமைக்கு நன்றி மேடம்.
நிச்சயம் இது ஒரு மகளிர் தினப்பரிசு எனக்கு.
நண்பர்களே,மிக எளிய நடையில் சிக்கலானவிஷயங்களையும் நமக்குப் புரிய வைத்துவிடும் புவனேஸ்வரி மேடமின் இந்த நூலை வாங்கிப்படித்துப் பயனடைய அன்புடன் வேண்டுகிறேன்.
அன்புடன்
உமா மோகன்
மார்ச் 8, 2021//
இவரது உரை வீடியோவாக:உமா மோகன் உரை
வாசகர்களாகிய உங்கள் அனைவரின் பேரன்புடன் என் தொழில்நுட்பப் பயணத்தில் எழுத்துப் பயணத்தையும் இணைத்துக்கொண்டு தொடர்கிறேன்.
என் எழுத்தை வாசிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் அன்பு நன்றிகள்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP
#காம்கேர்_புத்தகம் #compcare_book
#Daily_a_Book_Release_Virtual_Event