#கவிதை: எனக்கே எனக்கான ‘என்’கள்!


என் விருப்பங்கள் இவைதான்
என் தேர்வுகள் இவைதான்
என் இலக்குகள் இவைதான்
என் வேலைகள் இவைதான்
என் கடமைகள் இவைதான்
என் நோக்கங்கள் இவைதான்

என
எனக்கே
எனக்கான
‘என்’- களை
நான் பட்டியலிட்ட பிறகும்…

நான் இப்படித்தான்
என சொன்னபிறகும்…

என் ‘என்’களை சரியாக புரிந்துகொண்டு
என்னை விமர்சிக்காமல் மதிப்பளித்து
மகளிர் தின வாழ்த்துச் சொன்ன
அத்தனை ஆண், பெண் நட்புகளுக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்!

இப்படித்தான் என் இஷ்டப்படி நடந்துகொள்வேன்
உங்கள் குறித்து அக்கறை எனக்கு இல்லை;
இல்லை என்றால் ஒதுங்கிச் செல்வேன்
உங்கள் விருப்பம் எதுவாக இருந்தால் எனக்கென்ன?
என்று மெத்தனமாக
ஒதுங்கிச் செல்லும்
ஒதுங்கிச் சென்ற
ஆண், பெண் நட்புகளுக்கு
இரட்டிப்பு சிறப்பு நன்றிகள்!

இவர்களுக்கு மட்டும் ஏன் இரட்டிப்பு நன்றிகள்?

புரிந்துகொள்ளும் பக்குவம்
தனக்கில்லை என்பதை உணர்ந்து
தொந்திரவு கொடுக்காமல்
ஒதுங்கிச் செல்லும்
மாபெரும் பண்புக்காக!

இன்று உலக மகளிர் தினம்!

காம்கேர் கே. புவனேஸ்வரி
மார்ச் 8, 2021

#காம்கேர்_கவிதை #COMPCARE_Kavithai

(Visited 64 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon