#கவிதை: அறையில்லா சிறுமியின் புலம்பல்!

அறையில்லா சிறுமியின் புலம்பல்!

‘நேற்று ஃபேஸ்புக் லைவ் ஆடியோ வீடியோ ரூம்
அறிமுகப்படுத்தியுள்ளது’ – செய்தி.

வெர்ச்சுவல் உலகில்!

ஃபேஸ்புக்கில் ஆடியோ வீடியோ ரூம்…
ஏற்கெனவே டிவிட்டரில் ஸ்பேஸ் ரூம்…
போதாக் குறைக்கு க்ளப் கவுஸ் வேறு…

நிஜ வீட்டில்!

அப்பாவுக்கு ஓர் அறை…
அண்ணாவுக்கு ஓர் அறை…
அக்காவுக்கு ஓர் அறை…

அம்மாவும் நானும்தான் பாவம்!

நான்தான் கடைக்குட்டி என்பதால்
எனக்கு ஹால்தான் அறை…
அம்மாவுக்கு சமையலறையே
அலுவலக அறை…

நாங்கள் யாரும்
ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதில்லை…
ஒருவர் சொல்வதை மற்றவர்
கேட்பதும் இல்லை…

பேசினால் சண்டை வருகிறது
என ஆளுக்கொரு
மொபைல், லேப்டாப் என ஐக்கியமாகிறோம்…

ஆனால்…

க்ளப் ஹவுஸில் பேசுவதை தொடர்ச்சியாக விடாமல் கேட்டுக்கொண்டும், பேசிக்கொண்டும் இருக்கிறோம்…
டிவிட்டரில் இண்டலெக்சுவலாக விவாதிக்கிறோம்…
ஃபேஸ்புக் ஆடியோ வீடியோ ரூமிலும் பேசுகிறோம்… பகிர்கிறோம்… மகிழ்கிறோம்…

வெர்ச்சுவல் உலகிலும் பல ரூம்கள்…
நிஜ உலகிலும் பல அறைகள்…

ஆனால் மனிதர்களின் மனதிலும்
இதயத்திலும் தான்
அறைகள் பூட்டப்பட்டு விட்டன…

நாங்கள் பேசிக்கொள்வதில்லை…
சேர்ந்து சிரித்து
சேர்ந்து சாப்பிட்டு
சேர்ந்து பேசி
சேர்ந்து விளையாடி
சேர்த்து கேலி கிண்டல் செய்து
எத்தனையோ நாட்களாகி விட்டன
முன்பெல்லாம்
வீட்டில் சேர்ந்திருப்பதற்கு நேரம் இருக்காது…
அதை காரணம் சொன்னோம்!

இன்று
எல்லோருக்குமே ஒர்க் ஃப்ரம் ஹோம்,
ஆன் லைன் கிளாஸ் தான்!

எல்லோரும் வீட்டில் தான் இருக்கிறோம்
ஆனாலும்
நாங்கள் அதிகம் பேசிக்கொள்வதில்லை…

காரணம் நாங்கள் வெர்ச்சுவல் உலகில்
ஆளுக்கொரு அறையில்…

ஆம்.

ஃபேஸ்புக்கில் லைவ் ஆடியோ வீடியோ ரூமில் ஒருவரும்,
டிவிட்டரில் ஸ்பேஸ் ரூமில் ஒருவரும்,
க்ளப் கவுஸில் ஒருவரும் என
நாங்கள் அனைவரும் ரொம்ப பிஸி!

காம்கேர் கே. புவனேஸ்வரி
ஜூன் 30, 2021

#காம்கேர்_கவிதை #COMPCARE_Kavithai

(Visited 38 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon