பதிவு எண்: 989 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 258
செப்டம்பர் 15, 2021 | காலை: 6 மணி
மனமே மருந்து!
எங்கள் பெரியப்பா ஹோமியோபதி கிளினிக் வைத்திருந்தார். ஹோமியோபதி மாத்திரைகள் குட்டிகுட்டியாய் ஜவ்வரிசி தித்திப்பாய் இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும். மருந்தை அதில் ஊற்றுவதற்குமுன் அவை வெறும் சர்க்கரை உருண்டைகளே. அதில் மருந்தை கலந்தவுடன் அவை மருத்துவ குணம் பெறுகின்றன.
இந்த மருத்துவப்படி நோயின் வீச்சுக்கும் மருந்துகளின் பவருக்கும் ஏற்ப சில மருந்துகளை ஒரு வாரத்துக்கு ஒரு நாளோ அல்லது 15 நாட்களுக்கு ஒருநாளோ சாப்பிட்டால் போதுமானது.
அந்த நிலையில் ஒரு நோயாளிக்கு மருந்தே கொடுக்காமல் மருந்து கலக்காத அந்த மாத்திரைகளை மற்ற நாட்களுக்குக் கொடுத்து அதன் மூலம் நோயை சரி செய்வார்களாம்.
சிலருக்கு நோயே இருக்காது. மனதளவில் நோய் இருப்பதாக கற்பனையிலேயே மனதை வருத்திக்கொள்வார்கள். அவர்களுக்கு இத்தகைய ட்ரீட்மென்ட் நூறு சதவிகிதம் பொருந்தும்.
நாம் மருந்தை சாப்பிடுவதாக நமது மனம் நினைத்தாலே போதும் உடல் பல்வேறு நோய்களை தானே சரி செய்து கொள்ளும்.
இத்தனை சக்திவாய்ந்தது நமது மனம். மனதை ஆளும் சக்தி நம்மிடம்தான் உள்ளது.
நம் மனதை ஆளும் கடிவாளம் நம்மிடம் இருக்கும்வரை நம்மை நம்மால் ஆள முடியும்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP