வாழ்க்கையின் OTP-12 (புதிய தலைமுறை பெண் – ஜூலை 2019)

பாசிட்டிவோ நெகட்டிவோ, ஒருவர்  பேசிய வார்த்தைகள்  செய்கைகள் எல்லாம் காலப்போக்கில்  மறந்துவிடும். ஆனால், அந்த வார்த்தைகளும் செய்கைகளும் நம்மை எப்படி உணர செய்ய வைத்தன  என்பதைப் பொறுத்துத்தான்  நட்பும் விரோதமும். எழுத்து வடிவில் நாம் கொடுக்கும் தகவல்களுக்கு தரும் கமா, முற்றுப்புள்ளி, ஆச்சர்யக்குறி, கேள்விக்குறி போன்ற Punctuation-களைப் போலவே நம் வாழ்க்கைக்கும் அவை அவசியம் தேவை. வாழ்க்கையில்… எந்தெந்த விஷயங்களுக்கு கேள்விக்குறி ? போடவேண்டும் எந்தெந்த விஷயங்களுக்கு ஆச்சர்யக்குறி !…

வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[4] : ஏக்கத்தில் வளரும் பெண் குழந்தைகள்! (நம் தோழி)

ஏக்கத்தில் வளரும் பெண் குழந்தைகள்! ஒரு தொலைபேசி அழைப்பு. வேலூரில் இருந்து  ஒரு வாசகி பேசுகிறார் என சொல்லி என் உதவியாளர் போனை கனெக்ட் செய்தார். போனில் பேச ஆரம்பித்த பெண் நான் எழுதிய ‘இப்படிக்கு அன்புடன் மனசு’ என்ற புத்தகம் குறித்தும், அந்தப் புத்தகத்தில் விவேகானந்தர் கொள்கைகளை என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களுடன் ஒப்பிட்டு எழுதி இருந்ததையும் குறிப்பிட்டு அழகான ஒரு புக் ரிவ்யூவையே போனில் பகிர்ந்துவிட்டார். நியூ…

வாழ்க்கையின் OTP-11 (புதிய தலைமுறை பெண் – ஜூன் 2019)

ஒரு பிரச்சனைக்கான தீர்வு என்பது, அதை நேரடியாக அணுகி அதனுள் சென்று நேரடியாக தீர்த்துக்கொள்வதும் தெளிவு பெறுவதும் ஒரு வகை. பிரச்சனையை திசை திருப்பி வெளியில் இருந்து அந்தப் பிரச்சனையை அணுகி வேறுவிதமாக அதைக் கையாண்டு தீர்வு காண்பது மற்றொரு வகை. இதை மடைமாற்று முறை எனலாம். முன்னதைவிட பின்னதில் தீர்வு கிடைக்க வாய்ப்பு அதிகம். காரணம்… நேரடியாக அணுகும்போது பிரச்சனைக்கான காரணகர்த்தாவும், பிரச்சனையினால் பாதிக்கப்பட்டோரும் தீவிர உணர்ச்சிக் கொந்தளிப்பில்…

வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[3] : ஆண் தேவதைகளும் பெண் தெய்வங்களும்! (நம் தோழி)

ஆண் தேவதைகளும் பெண் தெய்வங்களும்! ஒரு மேடை நிகழ்ச்சி. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மைக்கில் பேசிக்கொண்டிருக்கிறார். அவர் அந்த நிகழ்ச்சிக்கு ஒரு பெண்மணியை சிறப்பு பேச்சாளராக அழைத்தாராம். அதற்கு அந்தப் பெண்மணி வீட்டில் கேட்டுச் சொல்கிறேன் என்று சொன்னாராம். இப்படித்தான் பெண்கள் தங்கள் முடிவை தாங்கள் எடுக்காமல் வீட்டில் கேட்டுச் சொல்கிறேன், கணவரிடம் கேட்டுச் சொல்கிறேன் என்று தங்கள் சுதந்திரத்தை மற்றவர்கள் கைகளில் ஒப்படைத்து அடிமையாக இருக்கிறார்கள் என்று பேசிக்கொண்டே போனார்….

வாழ்க்கையின் OTP-10 (புதிய தலைமுறை பெண் – மே 2019)

யார் நல்லவர் என்ற கேள்விக்கு பதில் சொல்வது கடினம்தான்.  இதற்கான விடை தேடிய போது பல விஷயங்களை ஆராய வேண்டி இருந்தது. தினந்தோறும் காலை 6 மணிக்கு ஃபேஸ்புக்கில் ‘இந்த நாள் இனிய நாள்’ என்ற தொடரை எழுதி வருகிறேன். தினமும் ஒரு நல்ல செய்தியுடன் ‘அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்’ என்ற வாழ்த்துடன் அந்த பதிவை முடிப்பேன். இப்படி மற்றவர்களுக்கு ஒரு நல்ல விஷயத்தைச் சொல்லி அவர்களுக்கு…

வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[2] : அழகும், பேரழகும்! (நம் தோழி)

அழகும், பேரழகும்! தினந்தோறும் காலை ஆறு மணிக்கு ஃபேஸ்புக்கில் ‘இந்த நாள் இனிய நாள்’ என்ற தலைப்பில் தினம் ஒரு செய்தியுடன் ‘அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்’என்ற வாழ்த்துடன் பதிவிட்டு வருகிறேன். இது வானொலியில் தொடர்ச்சியாக வெளிவந்த  தென்கச்சி சுவாமிநாதன் அவர்களின் ‘இன்று ஒரு தகவல்’ போல உள்ளது என்ற பாராட்டுடன் பெருத்த வரவேற்பைப் பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக  தன்னம்பிக்கைப் பெண்கள் குறித்தும், பெற்றோர் பிள்ளைகள் குடும்ப…

இங்கிதம் பழகுவோம்[30] பெண் நிர்வாகம் (https://dhinasari.com)

எதிராளியின் உணர்வுகளை அதிகம் புரிந்துகொள்ளும் திறனும், அதற்கேற்றாற்போல செயல்படும் ஆளுமையும் ஆணை விட பெண்ணுக்கு கொஞ்சம் அதிகம்.  இது பெண்களுக்கு இயற்கைக் கொடுத்த வரம். இந்த வரத்தை சரியாக பயன்படுத்துவதும், தவறாகப் பயன்படுத்துவதும் பெண்களின் தனிப்பட்ட சுபாவம். பொதுமைப்படுத்த முடியாது. 2007-ம் ஆண்டு என் பெற்றோர் பெயரில் ‘ஸ்ரீபத்மகிருஷ்’ அறக்கட்டளையைத் தொடங்கியபோது சென்னை வாணி மஹாலில் ‘அன்புள்ள அப்பா அம்மாவுக்கு’என்ற  தலைப்பில் என் பெற்றோரின் வாழ்க்கையை 1-1/2 மணிநேர ஆவணப்படமாக…

கனவு மெய்ப்பட[25] – ஒரு பாஸ்வேர்ட் வாழ்க்கையை மாற்றுமா! (minnambalam.com)

சிரித்துக்கொண்டே இருப்பவர்களுக்கும், மற்றவர்களை சிரிக்க வைப்பவர்களுக்கும் பிரச்சனைகளே இல்லை என நினைக்க வேண்டாம். மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் சார்லி சாப்ளின். திரையைத் தாண்டி நிஜவாழ்க்கையிலும் தன் சோகங்களை மறைத்து மற்றவர்கள் முன் மகிழ்ச்சியாக இருப்பதாகவே நடித்தவர்தான் சாப்ளின். அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் சொல்லொண்ணாத் துயரங்கள். வாழ்க்கை அவரை ஒவ்வொரு முறை காயப்படுத்திய போதும், தன் புன்னகையால் அவற்றை வென்று காட்டிய உன்னதக் கலைஞர் அவர். ‘மழையில்…

இங்கிதம் பழகுவோம்[29] பார்ஷியாலிடி வேண்டாமே? (https://dhinasari.com)

பார்ஷியாலிடியை தவிர்த்தால் ஃபேஸ்புக் நட்பில் மோதல்களைத் தவிர்க்கலாம்… ஃபேஸ்புக்கில் நாம் பதிவிடும் பதிவுகளுக்கு எத்தனையோ பேர் கமெண்ட் செய்திருப்பார்கள். பலர்  பேர் லைக் செய்திருப்பார்கள். ஒருசிலர் படித்து ரசிப்பார்கள். லைக்கும் கமெண்டும் போடுவதற்கு தயங்கி கடந்து செல்வார்கள். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். நம் பதிவு பயனுள்ளதாக இருந்தால் அவை மேடை பேச்சுகளிலும், விழா மேடைகளிலும், கல்விக்கூடங்களிலும் என எங்கேனும் எடுத்தாளப்பட்டுக் கொண்டிருக்கும். எனவே தொடர்ச்சியாக ஃபேஸ்புக்கில் பதிவிடும் நண்பர்கள்…

கனவு மெய்ப்பட[24] – ஆன்லைன் அம்பலங்கள்! (minnambalam.com)

முன்பெல்லாம் பொது இடங்களில் நம் குடும்ப விஷயங்களை பேசுவதையும், பிரயாணங்களின்போது எந்த ஊருக்குச் செல்கிறோம் எத்தனை நாட்கள் தங்க இருக்கிறோம் போன்ற விஷயங்களையும் சத்தம்போட்டு சொல்வதைக்கூட பாதுகாப்புக் கருதி நம் பெரியோர்கள் கண்டித்திருப்பார்கள். “சுவருக்குக்கூட காதிருக்கும்… எனவே இரவு நேரத்தில் சப்தம்போட்டு பேசக்கூடாது” என்று சொல்லி வளர்க்கப்பட்ட நம் நாட்டில் இன்று தொழில்நுட்ப உச்சத்தில் இருக்கும் நம் மக்களில் பெரும்பாலானோர் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? எந்த ஊருக்குச் செல்கிறோம், எந்தத் தேதியில்…

error: Content is protected !!