ஆட்டிசம் குறித்த அச்சம் தவிர்க்க (ஆகஸ்ட் 24 & டிசம்பர் 13, 2018)

தமிழ்நூல் வெளியீடு மற்றும் விற்பனை மேம்பாட்டுக் குழுமம் வழங்கும் 2017-18ல் வந்த சிறந்த நூல்களுக்கான பிரிவில், யெஸ். பாலபாரதி அவர்கள் எழுதிய ‘புதையல் டைரி’ – யை சிறந்த சிறுவர் நூலுலாக பரிசுக்கு தேர்வு செய்துள்ளது. முதற்கண் அவருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். தன்  மகன் குறித்தும் ஆட்டிசம் பாதித்த சிறப்புக் குழந்தைகள் குறித்தும்  அவ்வப்பொழுது வெப்சைட்/ஃபேஸ்புக்/பத்திரிகைகளில் இவர் எழுதி வரும் விழிப்புணர்வு கட்டுரைகள் மூலமும் இவரது மேடை பேச்சுகள் மூலமும் …

சேவைக்கு ஓர் ஆலயம் சேவாலயா…

குழந்தைகளிடம் இருந்து பொய்யான சிறு புன்னகையைக் கூட அத்தனை சுலபமாக நம்மால் பெற்றுவிட முடியாது. பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு இடங்களில் பள்ளி ஆசிரியர்களுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும், கல்லூரி பேராசிரியர்களுக்கும், எம்.என்.சி நிறுவனங்களில் பணிபுரியும் இளைஞர்களுக்காகவும் மோட்டிவேஷனல் உரை நிகழ்த்தி இருக்கிறேன். நம்முடைய உரை எப்படி இருந்தாலும், பெரியவர்கள் கட்டாயத்துக்காக அமைதிக்காக்கலாம்… ஆனால் குழந்தைகளிலும் சேர்த்துக்கொள்ள முடியாத, பெரியவர்களிலும் சேர்த்துக்கொள்ள முடியாத இரண்டும்கெட்டான் வயது மாணவ மாணவிகள்  நம் பேச்சு சுவாரஸ்யமாக…

இங்கிதம் பழகுவோம்[10] பெண்ணே உன் சக்தி உன் மனதில்தான்! (https://dhinasari.com)

1992-ம் ஆண்டு எம்.எஸ்.ஸி முடித்து சென்னை வந்து சொந்தமாக காம்கேர் நிறுவனத்தை ஆரம்பித்த காலத்தில் இரண்டு கம்ப்யூட்டர்களையும்,  இரண்டு பெண் அலுவர்களையும்  மட்டுமே வைத்துக் கொண்டு செயல்பட ஆரம்பித்தேன். என் கனவு  இலட்சியம் எல்லாமே சொந்தமாக நிறுவனம் தொடங்கி, அதில் பெண்களை மட்டுமே பணிக்கு அமர்த்தி, முழுமையாக நூறு சதவிகிதம் பெண்களால் இயங்கக் கூடிய நிறுவனமாக்க வேண்டும் என்பதே. கூடவே, திருமணம் ஆன பெண்களுக்காக குழந்தைகள் காப்பகத்தையும் என் நிறுவனத்திலேயே…

இன்று புதிதாய் பிறந்தோம்(தேன்)

தொலைபேசித் துறையில் நுழைந்து தங்கள் கடின உழைப்பால்  சப் டிவிஷனல் இன்ஜினியராக அப்பாவும், சீனியர் டெலிபோன் சூப்பர்வைசராக அம்மாவும் பணியில் முன்னேறியவர்கள். அந்த காலத்தில், இருவருமே 24 மணிநேர பணி சுழற்சி காரணமாய் பகல் இரவு என மாறி மாறி வேலைக்குச் சென்றதால் அப்பா இல்லாத நேரங்களில் அம்மா அப்பாவைப் போலவும், அம்மா இல்லாத நேரங்களில் அப்பா அம்மாவைப் போலவும் செயல்படுவார்கள்… தாயுமானவராக அப்பா, தந்தையுமானவராக அம்மா… ஒருவருக்கு அம்மா…

வாழ்க்கையின் OTP-5 (புதிய தலைமுறை பெண் – டிசம்பர் 2018)

தாளமுடியாத மனச்சோர்வும் மனஅழுத்தமுமே ஸ்ட்ரெஸ். ஏதேனும் ஒரு விஷயத்தால் மனதளவில் சோர்வடைவது ஸ்ட்ரெஸ்ஸின் தொடக்கப்புள்ளி. தொடர்ச்சியாய் அதே விஷயத்தில் மூழ்கி சோர்வடைந்த மனதை கசக்கிப் பிழிந்து தற்கொலை அல்லது கொலைவரை கொண்டு செல்வது ஸ்ட்ரெஸ்ஸின் உச்சம். சிகரெட், மது என எந்தப் பழக்கமும் இல்லாதவர்களுக்குக்கூட ஹார்ட் அட்டாக், டயாபடிக்ஸ் போன்ற உபாதைகள் வருவதற்கு மிக முக்கியக் காரணம் ஸ்ட்ரெஸ். ஸ்ட்ரெஸ்ஸில் இருந்து வெளியே வருவதற்காகத்தானே புகைக்கிறோம், மது அருந்துகிறோம் என…

எது முக்கியம்

அண்மையில் சென்னை ஆதம்பாக்கத்தில் ஒரு பெண்கள் விடுதியில் ரகசிய கேமிராக்கள் வைத்து பெண்களை வீடியோ எடுத்து வருவதை அந்த விடுதிப் பெண்கள் மொபைல் ஆப் மூலம் கண்டறிந்து போலீஸில் புகார் அளிக்க அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து பரவலாக எல்லா மீடியாக்களிலும் ‘பெண்களே உஷார்… இரகசிய கேமிராக்கள் உங்களை கவனிக்கின்றன…’ என்பதே செய்தி. கைது செய்யப்பட்ட ஆண்களின் முகத்துடன் கைது செய்து போலீஸ் அழைத்துச் செல்லும் புகைப்படத்தையும் போட்டு…

கனவு மெய்ப்பட[5] – தினம் ஒரு கிழங்கு! (minnambalam.com)

‘நாம் ஒரு முயற்சி செய்கிறோம். அதன் பலன் பாசிட்டிவாக இருந்தால் அது வெற்றி, நெகட்டிவாக இருந்தால் அது தோல்வி’ இப்படித்தான் நம்மில் பெரும்பாலானோர் நினைத்துக்கொண்டிருக்கிறோம். உண்மையில் நம்முடைய முயற்சியே வெற்றிதான். நாம் எடுக்கின்ற முயற்சியின் பலன் நேர்மறையாக பாசிட்டிவ் பலனைக் கொடுக்கலாம், எதிர்மறையாக நெகட்டிவ் பலனைக் கொடுக்கலாம் அல்லது இரண்டுமே இல்லாமல் ஒரு செயல் நடைபெற்றது என்ற அளவில் எந்த பலனும் இல்லாமல் நியூட்ரலாகவும் இருக்கலாம். உண்மையில் முயற்சி செய்வதே…

இங்கிதம் பழகுவோம்[9] எளிமை கண்டு ஏளனம் வேண்டாம்! (https://dhinasari.com)

ஒரு முறை என் அம்மாவுக்கு பல் சம்மந்தமான மருத்துவ ஆலோசனைக்கு டாக்டரிடம் அப்பாவுடன் சென்றிருந்தார். நானும் சென்றிருந்தேன். அம்மாவின் பல் பரிசோதனை முடிவதற்குள் அம்மா பற்றிய சிறிய அறிமுகம். அம்மா மிகுந்த தைரியசாலி. எதையும் ஆராய்ந்து அறிந்து முடிவெடுக்கும் பக்குவம் கொண்டவர். 40 ஆண்டுகாலம் தொலைபேசித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்த காலத்தில் பெண்களுக்கு இரவு ஷிஃப்ட் என்பது பொதுவாகிவிட்டது. ஆனால் அந்தக் காலத்திலேயே 24 மணிநேர பணிச்…

மொழிகளின் லாஜிக்!

மொழிகளின் லாஜிக்! மனித மொழிகளுக்கு மட்டுமல்ல கம்ப்யூட்டர் மொழிகளுக்கும் லாஜிக் ஒன்றே ஒன்று தான்! மொழிகள் எதுவாக இருந்தாலும் அதற்கான உழைப்பு எங்கிருந்தாலும் அதற்காக உழைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் போற்றுதலுக்குறியவர்கள். காரணம். மொழிதான் உலகில் மற்ற உயிரினங்களில் இருந்து  மனிதனை வித்தியாசப்படுத்துகிறது. மகாகவி பாரதியார், இந்தி சமஸ்கிருதம் தவிர்த்து ஆங்கிலம் பெங்காலி ஹச் போன்ற மொழிகளிலும் புலமைப் பெற்றிருந்ததால்தான் ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’…

Book Exchange Mela (Dec 2, 2018)

இன்று ஓர் இனிய நாள்… சைட் எ புக் (siteabook)  இந்த App சார்பாக  புத்தக மாற்று மேளா சென்னையில் இன்று (டிசம்பர் 2, 2018) தி.நகர் ,கிருஷ்ணா தெரு, ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில்  உள்ள  இன்ஃபோசிஸ் ஹாலில் நடைபெறுகிறது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் அனைத்து வாசகர்களும் தங்கள் படித்த புத்தகங்களை  கொண்டு வந்து வேறு புத்தகங்களை மாற்றி கொள்ளலாம். இலவசமாக என்பது ஹைலைட்! நேற்று போனில் என்னுடன் பேசிய…

error: Content is protected !!