ஸ்ரீபத்மகிருஷ் 2008 – எங்கள் வீட்டு குழந்தைகள் தினம்

ஸ்ரீபத்மகிருஷ்  அறக்கட்டளையின்  முதலாம் ஆண்டு விழா  “எங்கள் வீட்டுக் குழந்தைகள் தினம்-2008” என்ற பெயரில் ஆகஸ்டு 31, 2008 அன்று ஸ்ரீபாரதீய வித்யா பவன், மைலாப்பூரில் கொண்டாடப்பட்டது.

சிறப்பு விருந்தினர்கள்

இந் நிகழ்ச்சிக்கு முத்தமிழ்ப் பேரரசி டாக்டர் சரஸ்வதி இராமநாதன்,
பேராசியர் டாக்டர் மறைமலை இலக்குவனார் மற்றும்
கலைமாமணி வானொலி அண்ணா கூத்தபிரான் ஆகியோர் கலந்த கொண்டு
வாழ்த்துரை தந்து சிறப்பித்தனர்.

சிறப்பு நிகழ்ச்சிகள்

இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக
மேல்மருவத்தூரை அடுத்த சிறுவிளம்பாக்கம் என்ற கிராமத்தில் உள்ள
T.G.S ஆஸ்ரமக் குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகளை அழைத்துக் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் T.G.S ஆஸ்ரமக் குழுவின் கலை நிகழ்ச்சிகள்,
இயல்-இசை-நாடகம் போன்றவைகள் மிகச் சிறப்பாக நடைப்பெற்று
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை வியக்க வைத்தது.

T.G.S ஆர்கெஸ்ட்ரா குழுவினர்
மென்மையான பாடல்களை மிதமான இசையில் பாடியது
அனைவராலும் வரவேற்கப்பட்டது.

அதோடு மட்டுமல்லாமல்,
M.G.R வேடமணிந்து, தானே பாடி, ஆடி குழந்தைகளை மகிழ்வித்த
பாடகரது பாடல்கள் பார்வையாளர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுத் தந்தது.

டாக்டர் சரஸ்வதி இராமநாதன் அவர்கள்
தலைமை தாங்கி குழந்தைகளுக்கு சிறப்புரை வழங்கினார்.

வானொலி அண்ணா கலைமாமணி கூத்தபிரான்
அவர்கள் வினாடி-வினா, பொது அறிவு போன்ற பயனுள்ள நிகழ்ச்சிகளை நடத்தி
குழந்தைகளை மகிழ்வூட்டினார்.

மாணவி எழுதிய புத்தக வெளியீடு

நிகழ்ச்சியில் 12 வயதேயான செல்வி நிவாசினி ஆங்கிலத்தில் எழுதி,
காம்கேர் பதிப்பகம் வாயிலாக பதிப்பிக்கப்பட்ட The Finding of a New World
என்ற புத்தகத்தை டாக்டர் மறைமலை இலக்குவனார் வெளியிட்டார்.

மாணவ மாணவிகளுக்கான கம்ப்யூட்டர் கல்வி மேம்பாடு

காம்கேர் சாஃட்வேர் நிறுவன CEO, காம்கேர் புவனேஸ்வரி
ஆஸ்ரமக் குழந்தைகளுக்கு கம்ப்யூட்டரும்-கல்வியும்-மல்டிமீடியா அதிசயங்களும்
என்ற சிறப்பு கல்வி நிகழ்ச்சியை நடத்தினார்.

மேலும் மாணவ-மணவிகளுக்கு சிறப்புப் பரிசும் வழங்கப்பட்டு உற்சாகப்படுத்தப் பட்டது.

ஸ்ரீபத்மகிருஷ் விருது

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டோர் மற்றும் பார்வையாளர்கள் அனைவருக்கும்
ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளையின் “வாழ்த்தும் நெஞ்சங்கள்-வாழ்க பல்லாண்டு”
என்ற வாசகம் பொறிக்கப்பட்ட சிறப்புப் பரிசு கொடுக்கப்பட்டது.

விளம்பரங்கள் எதுவுமில்லாமலும்…,
செய்யும் பணியில் கடமை தவறாமலும்…,
தனிப்பட்ட வாழ்வில் ஒழுக்கத்தை கடைபிடித்தும்…,
வாழ்க்கையில் பிறர் முன்னேறுவதற்கான பல வாய்ப்புக்களை உருவாக்கி தந்து கொண்டும்…,
அமைதியாக எந்த மீடியாவினாலும் அறியப்படாமல் வாழ்ந்து
சாதனை செய்து வரும் 15 சாதனையாளர்களைத் தேர்ந்தெடுத்து
அவர்களுக்கு ஸ்ரீபத்மகிருஷ் விருது வழங்கி மரியாதை செய்யப்பட்டது.

இன்சுவை விருந்துடன் விழா இனிதே நிறைவேறியது.

மீடியா செய்திகள்

அழைப்பிதழ்

(Visited 103 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon