கற்ற கல்வியும் பெற்ற அறிவும்!

டாக்டர் ஷ்யாமா சுவாமிநாதன்!

இவருடன் இன்று ஒரு முக்கியமான பிராஜெக்ட் மீட்டிங். இவரது அறக்கட்டளை வெப்சைட் மற்றும் சமூகவலைதள பராமரிப்பு குறித்த டிஸ்கஷன்.

கடந்த 10 வருடங்களாக இவரும் நானும் பல சமூக சேவை அமைப்புகள் இளைஞர்களுக்காக நடத்திவரும் நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும், பேச்சாளராகவும் கலந்துகொண்டிருக்கிறோம்.

இன்றைய டிஸ்கஷனின் இடையில் எதேச்சையாக இன்று அவரது நட்சத்திரப் பிறந்தநாள் என்று சொன்னார்.

இவரது பிறந்தநாளில் இவரது வாழ்க்கைப் பாதையை வியந்து பாராட்டி வாழ்த்தினேன்.

35 வயதில் ரிப்போர்டராக சாவியில் தன் கேரியரைத் தொடங்கி தொடர்ந்து 5 வருடங்கள் ஜர்னலிஸ்டாக பணிபுரிந்து, இன்றுவரை Freelance ஜர்னலிஸ்டாக தொடர்ந்து வருகிறார்.

MA, M.Phil முடித்து 50 வயதில் சென்னை பிரசிடன்சி கல்லூரியில் பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷனில் Ph.D செய்து டாக்டர் பட்டம் பெற்றவர். அவர் எடுத்துக்கொண்ட டாப்பிக்  ‘பெண் சிசுக்கொலை தடுப்பு’ (Female Infanticide in the Rural Areas of Tamilnadu). இதற்காகவே தமிழகமெங்கும் உள்ள கிராமப்புறங்களுக்கு நேரடியாகச் சென்று அந்த மக்களுடன் பழகி ஆராய்ச்சிகள் செய்துள்ளார்.

தன் 50 வயதிலேயே டி.ஸ்ரீனிவாசன் வாலாம்பாள் ஸ்ரீவித்யா அறக்கட்டளையை (DSVS Trust) தொடங்கினார். தான் ஆராய்ச்சி செய்த கான்செப்ட்டிலேயே தன் சேவையையும் அமைத்துக்கொண்டார்.

ஹோசூரில், வாத்சல்யம் அறக்கட்டளையின் அரவணைப்பில் வளர்க்கப் பட்டுவரும் பெண் குழந்தைகளுக்கென  ‘ஸ்ரீ சாரதேஸ்வரம்’ என்ற பெயரில் ஒரு முன் மாதிரி கிராமம், ஹோசூர் அருகே தேன்கனிக்கோட்டை எனும் அழகிய கிராமத்தில் உருவாகியுள்ளது.

தன் DSVS Trust – அறக்கட்டளை மூலம் ஹோசூர் வாத்சல்யம் அறக்கட்டளையில் வளர்ந்துவரும் ஆதரவற்ற பெண் குழந்தைகளைப் பாதுகாத்து, கல்விச்செல்வம் அளித்து, வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து, திருமணமும் செய்துவைத்து தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்.

படித்த படிப்பை வெறும் பட்டம் பெறுவதற்காக மட்டும் பயன்படுத்தாமல், தன் வாழ்க்கையிலும் பயன்படுத்துபவர்கள் அபூர்வம். அந்த அபூர்வங்களில் இவரும் ஒருவர்.

இவரது அறக்கட்டளை வெப்சைட்டை  என் நிறுவனம் காம்கேர் மூலம் உருவாக்கி வடிவமைத்து இன்றுவரை பராமரித்தும் வருகிறேன். ஹோசூரில் ‘ஸ்ரீ சாரதேஸ்வரம்’ என்ற கிராமத்தில் பராமரிக்கப்பட்டுவரும் பெண்குழந்தைகளைப் பார்வையிட இவர் செல்லும்போது நானும் சிலமுறை சென்றிருக்கிறேன்.

இப்படியாக இவரது சேவையில் நானும் பங்கேற்று வருகிறேன் என்பது பெருமகிழ்ச்சி.

இவரிடம் எனக்கு மிகவும் பிடித்த மற்றொரு விஷயமும் உள்ளது. அது, இவர் என்னை ‘காம்கேர்’ என்று அழைப்பதுதான்.

என் வாழ்த்துக்களும் பிராத்தனைகளும் மேடம்!

அன்புடன்
காம்கேர் கே.புவனேஸ்வரி
டிசம்பர் 21, 2018

(Visited 162 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon