ஆன்லைனில் அலுவலகம், விளம்பரம், விரிவுபடுத்தல்

வெளியீடு: நியூ சென்சுரி புக் ஹவுஸ்

பதிப்பகத்தின் தொலைபேசி எண்கள்: 044-26251968, 044-26359906, 044-26258410

‘என்னிடம் ஒரு கம்ப்யூட்டர் / லேப்டாப்  இருக்கு மேடம், வீட்டில் இருந்தே ஆன்லைனில் சம்பாதிக்க முடியுமா?’ – பலரும் கேட்கின்ற கேள்வி இதுதான்.

இவர்களில் 99 சதவிகிதம் பேர் ஏற்கெனவே பணம் கட்டி ஏமாந்துபோனவர்களாகத்தான் இருப்பார்கள்.

ஆனால், அவர்கள் ஆரம்பத்தில் என்னிடம் அந்த விஷயத்தைச் சொல்ல மாட்டார்கள்.  நான் அவர்களிடம் பேச்சை வளர்க்கும்போதுதான் மிகுந்த வருத்தத்துடன் அழமாட்டாத குறையாக தாங்கள் ஏமாந்த விஷயத்தை சொல்லி முடிப்பார்கள்.

முகமே தெரியாத நபர்களுக்கு முன்யோசனை இன்றி முன் பணம் செலுத்திவிட்டு வெளியில் சொல்லவும் முடியாமல், உள்ளுக்குள் வைத்துக்கொள்ளவும் முடியாமல் மன உளைச்சலில் புழுங்கிக்கொண்டிருப்பவர்களிடம் நான் கேட்கின்ற கேள்விகள் இவைதான்:

‘நீங்கள் உங்கள் நேரத்தையும், உழைப்பையும்போட்டு செய்துகொடுக்கின்ற வேலைக்கு நீங்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்?’

‘யாராவது வேலையே செய்யாமல் பணம் கொடுப்பார்களா அல்லது குறைந்த உழைப்புக்கு அள்ளி அள்ளி பணம் கொடுப்பார்களா?’

‘வெப்சைட் லிங்கை கிளிக் செய்யச் சொல்கிறார்கள் என்றால் அந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் சமூக விரோத செயல்களுக்குப் பயன்படுபவையாக இருந்தால்…’

‘வெளிநாட்டு நிறுவனத்துக்கு உங்களை ஏஜென்ட்டாகப் போட்டு உங்கள் வங்கி அக்கவுண்ட்டை தீவிரவாத செயல்பாடுகளுக்குப் பயன்படுத்திக் கொண்டால்…’

‘உங்களை பண மழையில் நனைய வைக்க அவர்களுக்கு என்ன அவ்வளவு அக்கறை?’

ஆன்லைனில் முகம் தெரியாதவர்களிடம் முன்பணம் செலுத்தி ஆர்டர் எடுக்காதீர்கள். வெப்சைட் லிங்கை கிளிக் செய்யவும், இமெயிலை ஃபார்வேர்ட் செய்யவும், வங்கி அக்கவுன்ட் ஏற்படுத்திக்கொண்டு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஏஜென்ட்டாக செயல்படவும்சொல்கின்ற வேலைகள் பெரும்பாலும் ‘ஆன்லைன் ஜாப் – அள்ளலாம் பணத்தை’ என வார்த்தைஜாலத்துடன் விளம்பரப்படுத்தப்படும். அவை உங்கள் கண்களில்பட்டால், தயவுதாட்சண்யமின்றி உதறித் தள்ளுங்கள்.

‘யாராவது ஆன்லைனில் பிசினஸ் கொடுப்பார்கள். அதை செய்து பணம் சம்பாதிக்கலாம்’ என்ற எண்ணம் இருந்தால் உடனடியாக அதையும் கைவிடுங்கள்.

மாறாக, உங்களிடம் உள்ள திறமைக்கு கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட்டை எப்படிப் பயன்படுத்தலாம் என்று சிந்தியுங்கள். அதை நேரடியாக செய்கின்ற பிசினஸாக்கி, அந்த பிசினஸுக்கு ஆன்லைன் வசதிகளை எப்படிப் பயன்படுத்தலாம் என்று யோசியுங்கள்.

உதாரணத்துக்கு, உங்களுக்கு தையல் தெரியும் என்றால், விதவிதமாக டிஸைன் பிளவுஸ்கள் தைத்துத் தரும் பிசினஸை வீட்டிலேயே தொடங்குங்கள். உங்கள் வீடு, உறவினர் வீடு, பக்கத்து வீடு, அடுத்தத் தெரு, அக்கம் பக்கத்து ஊர் என உங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் பிரபலமாகுங்கள். பிறகு அந்த பிசினஸை ஆன்லைனில் உள்ள வசதிகள் மூலம் உலகறியச் செய்யுங்கள்.

எந்த வேலை செய்தாலும் முழு மனதுடனும், ஈடுபாட்டுடன் உங்கள் திறமையை வெளிக்காட்டும்படி இருந்தால் வெற்றி உங்களைத் தேடிவரும். பணமும் கொட்டும். புகழும் கிடைக்கும். இரண்டுமே உங்கள் உழைப்பு. கிடைக்கின்ற வெற்றி உங்கள் சொத்து. தோல்வி கிடைத்தால் சோர்ந்துவிடாமல் எப்படி சரி செய்வது என்பதை நிதானமாக யோசித்து, தவறை சரி செய்துகொண்டு முன்னேறுங்கள். வெற்றி உங்கள் கையில்தான்.

எனவே, முதலில் உங்கள் திறமையை கண்டறியுங்கள். அதை வளர்த்தெடுங்கள். பிறகு பிசினஸ் ஆக்குங்கள். கம்ப்யூட்டர், இன்டர்நெட் மூலம் பிரபலப்படுத்துங்கள். இதுதான் உண்மையான ‘ஆன்லைன் ஜாப்’.

உங்கள் திறமை என்ன என்று கண்டறிந்து வையுங்கள். அதை ஆன்லைனில் பிரபலப்படுத்தி வியாபாரப்படுத்தும் கம்ப்யூட்டர்-இன்டர்நெட் தொழில்நுட்ப யுக்திகள் அத்தனையும் இந்தப் புத்தகத்தில்…

அசத்தும் ஆன்லைன் வாய்ப்புகள்

திறமைகளைப் பணமாக்கும் வித்தை

செலவே இல்லாமல் விளம்பரம் செய்யலாம்

இமெயிலே நம் இனிஷியல்!

இணையவெளியில் வடாம் போடலாம்!

உங்கள் பெயரில் ஓர் அலுவலகம்

புது அலுவலகத்துக்குப் பூஜைப் போடத் தயாரா?

இணையத்தில் வாடகைக்கு இடம் பார்த்தாச்சா?

உங்கள் வெப்சைட் சுவரை வாடகைக்கு விடலாமா?

விளம்பரம் மூலம் வருமானம்

வாடகை இடத்தை விற்கலாமா?

உங்கள் தயாரிப்புகளை பிளாக் (Blog) மூலம் இலவசமாக விளம்பரப்படுத்தலாம்!

பத்திரிகை நடத்தலாம் வாங்க…

நீங்களும் பதிப்பாளராகலாம்!

இ-புக்ஸ்களை எங்கு விற்கலாம்?

மின்னணுக் கருவிகளில் தமிழில் டைப் செய்யலாமா?

வீடியோ எடுங்க, விளம்பரம் செய்யுங்க!

உங்கள் பெயரில் இலவச டிவி

வீடியோக்கள் வருமானம் தருமா?

வானொலி விளம்பரங்கள் போல ஆடியோ விளம்பரங்கள்

விளம்பரங்களும், வாடிக்கையாளர்களும்!

நேரில் பார்க்காமலேயே மீட்டிங்!

வேலை வாய்ப்புக்கான சமூக வலைதளம்!

ஆன்லைனில் நோட்டீஸ்போர்ட்!

ஆன்லைனில் ஆல்ரவுண்டர் – கூகுள்+

ஆன்லைன் பயணப் பாதுகாப்பு!

தி இந்து – தமிழ் நாளிழதில்  நான் தொடர்ச்சியாக எழுதிவந்த கட்டுரைத்தொடர், நியூ சென்சுரி புத்தக நிறுவனத்தின் (New Century Book House – NCBH) வாயிலாக  ‘வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம் – ஆன்லைனில் அலுவலகம், விளம்பரம், விரிவுபடுத்தல்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவருகிறது.

2019 ஜனவரி 4 முதல் 20 வரை, சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில் நியூ சென்சுரி புத்தக நிறுவனத்தின் (New Century Book House – NCBH) ஸ்டால்களில் (377, 378, 441, 442) கிடைக்கும்.

2017-ம் வருடம் இதே பதிப்பகத்தின் மூலம்

படித்த வேலையா, பிடித்த வேலையா?

காலேஜ் ப்ராஜெக்ட்

இப்படிக்கு அன்புடன் மனசு

திறமையைப் பட்டைத் தீட்டுங்கள

என நான்கு புத்தகங்கள் வெளிவந்துள்ளன….

தேவையானவர்கள் வாங்கிப் பயன்படுத்துங்கள்…

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
ஜனவரி 9, 2019

 

(Visited 310 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari