தி கேரளா ஸ்டோரி! – திரைப்படம் வெளியாகி மிகத் தாமதமாகவே பார்த்தேன் நேற்று. ஒவ்வொரு காட்சியும் பதபதைக்க வைக்கிறது. ‘குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள், நல்லபடியாக ஆளாக்குங்கள்’ என்று மட்டுமே சொல்ல முடிகிறது.
நாம் நம் இருப்பிடத்திலும், நம்மைச் சுற்றியும் நமக்குத் தேவையான நல்லவற்றை, நல்ல ஒழுக்கத்தை நாம் விதைக்கவும் பரப்பவும் பாதுகாக்கவும் தவறினால், மற்றவர்கள் தங்களுக்குத் தேவையானதை விதைக்கவே செய்வார்கள். அது நிலத்தில் என்றாலும் சரி, மனதில் என்றாலும் சரி!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, Founder & CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
மே 2, 2024 | வியாழன்
(Visited 1,688 times, 1 visits today)