விஞ்ஞான கண்டுபிடிப்புகளும், சமூக வலைதளங்களும்!

பல விஞ்ஞான கண்டுபிடிப்புகள் ரிலாக்ஸ்டான மனநிலையில் இருக்கும்போதுதான் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டது என்பதையும், நம் வியாபாரத்துக்கு எப்படி சமூக வலைதளங்களை பயன்படுத்தலாம் என்பதையும் ஒரு ஜென் கதை மூலம் விளக்கி இருக்கிறேன், 10 ஆண்டுகளுக்கு முன்பே, மக்கள் தொலைக்காட்சியில்.

இந்த நிகழ்ச்சி குறித்து, இரண்டு தினங்களுக்கு முன்னர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தேன். இது நான் நிகழ்த்திய 2500 க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், ஒரு நாள் நிகழ்ச்சியில் இருந்து ஒருசில நிமிடங்கள் மட்டுமே.

10 வருடங்களுக்கு முந்தைய நிகழ்ச்சி, ஆனாலும் அதில் நான் சொன்ன கதை எல்லா காலங்களுக்கும் பொருந்தும் என்பதால் பதிவிட்டுள்ளேன் எனவும் அந்தப் பதிவில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தேன்.

ஆனாலும், பெரும்பாலானோர் நான் இப்போதுதான் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதாக நினைத்து வாட்ஸ் அப்பிலும், மெசஞ்சரிலும், ஃபேஸ்புக், டிவிட்டர் கமெண்ட்டிலும் வாழ்த்து தெரிவித்திருந்தார்கள்.

அனைவருக்கும் நன்றி!

ஜெயா டிவி, மக்கள் டிவி, பொதிகை டிவி, டிடிஎன் உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சிகள் மூலம் 2500 எபிசோட்களுக்கும் மேல் ‘தொழில்நுட்பம்’ சார்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறேன். இப்போதும் கலந்துகொண்டு வருகிறேன், நிகழ்ச்சியின் முக்கியத்துவத்துக்கு ஏற்ப.

அதில் சிலவற்றை எங்கள் காம்கேர் மூலம் நாங்களே தயாரித்து வழங்கி இருக்கிறோம். பலவற்றில் பங்கேற்று சிறப்புற நிகழ்த்தி இருக்கிறேன்.

எங்கள் காம்கேரின் பணி முழுக்க முழுக்க சாஃப்ட்வேர்கள் தயாரிப்புதான் என்றால், என் தொழில்நுட்ப அனுபவங்களை எழுத்து, பேச்சு, காணொலி, இண்டர்நெட், சமூகவலைதளங்கள், யு-டியூப் என அத்தனை மீடியாக்கள் வாயிலாகவும் அவ்வப்பொழுது பதிவு செய்து வருகிறேன். அதை என் பணியையும், பணிசார்ந்த விஷயங்களையும் பின்தொடர்ந்து வரும் மூன்று தலைமுறை மக்களும் நன்கறிவர்.

இருந்தாலும் அறியாதவர்களுக்காக மீண்டும் சொல்லவே இந்தப் பதிவு!

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
மே 6, 2024 | திங்கள்

(Visited 2,354 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon