அகில இந்திய வானொலியின் புதுச்சேரி முதன்மை அலைவரிசையில் (January 2020)

2020–ம் ஆண்டிற்கான  முதல் நேர்காணல்!

அகில இந்திய வானொலியின் புதுச்சேரி முதன்மை அலைவரிசையில் ஞாயிறு ஜனவரி 19,   2020 பிற்பகல் 1.05-க்கு  பூவையர் பூங்கா நிகழ்ச்சி.  மாதம் ஒரு மங்கை முகம் புதிய நிகழ்ச்சி- சாதனைப்பெண்களுடன் சந்திப்பில், முதுநிலை அறிவிப்பாளர் உயர்திரு. உமா மோகன் ஒருங்கிணைப்பில் எனது நேர்காணல்.

மொபைலில் ரெகார்ட் செய்த ஆடியோ லிங்க்:

27 ஆண்டுகாலமாக காம்கேர் சாஃப்ட்வேர் என்ற நிறுவனத்தை சிறப்பாக நடத்தி வருவதன் மூலம் தொழில் துறையில் வெற்றிகரமாக இயங்குவதுடன் அந்தத் துறையில் முன்னணியிலும் இருப்பது குறித்த விரிவான நேர்காணல்.

ஆண்ட்ராய்ட் போனில் News on Air app என்ற ஆப் மூலம்  Air puducherry PC என்பதை தேர்வு செய்து போனிலேயே கேட்கலாம்.

2020–ம் ஆண்டிற்கான முதல் நேர்காணல் என்ற வகையிலும், 25 நிமிட நேர்காணலும் இடைவெளி இன்றி  தொடர்ச்சியாக அமைந்ததிலும் இந்த நேர்காணல் மனதுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

ஜனவரி 19, 2020

ஆண்ட்ராய்ட் போனில் News On Air App இன்ஸ்டால் செய்யும் முறை 

ஆண்ட்ராய்ட் போனில் ஆப் ஸ்டோரில் News On Air என்ற ஆப்பை தேர்ந்தெடுத்து இன்ஸ்டால் செய்துகொள்ள வேண்டும்.

இப்போது News On Air ஆப்பின் லோகோ போன் திரையில் வெளிப்படும்.

News on Air ஆப்பின் லோகோவை கிளிக் செய்தால் அந்த ஆப்பின் முகப்புத் திரை வெளிப்படும்.

இப்போது கிடைக்கும் மொழிகளின் பட்டியலில் Tamil என்ற விவரத்தை தேர்ந்தெடுத்துக்கொண்டு Continue பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

இப்போது Tamil என்று நாம் தேர்ந்தெடுத்த மொழியுடன் News On Air ஆப்பின் திரை வெளிப்படும். இந்தத் திரையின் மேல்பக்கம் உள்ள  ரேடியோ ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.
இப்போது ரேடியோ ஸ்டேஷன்களின் பெயர்கள் வெளிப்படும். இதில் AIR Puducherry PC என்பதை தேர்ந்தெடுத்து கிளிக் செய்ய வேண்டும்.
இந்த ஐகான்களில் தேடி எடுத்து கிளிக் செய்ய கடினமாக இருந்தால் இந்த திரையின் மேல்பக்க வலது மூலையில் உள்ள லென்ஸ் ஐகானை கிளிக் செய்து AIR Puducherry PC  என டைப் செய்ய வேண்டும்.
இப்போது ஆல் இந்தியா ரேடியோவின் புதுச்சேரி ஸ்டேஷனை கேட்க உதவும் திரை AIR RADIO என்ற தலைப்பில் வெளிப்படும். இதிலுள்ள Play ஐகானை கிளிக் செய்து ரேடியோ கேட்கலாம். Pause ஐகானை கிளிக் செய்து நிறுத்திக்கொள்ளலாம். வலப்புற ஐகானை கிளிக் செய்து News On Air ஆப் பட்டியலில் உள்ள அடுத்த ஸ்டேஷனுக்கு செல்லலாம். இடப்புற பட்டனை கிளிக் செய்து முந்தைய ஸ்டேஷனுக்குச் செல்லலாம்.

எழுத்தும் ஆக்கமும்

காம்கேர் கே. புவனேஸ்வரி

(Visited 138 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon