கனவு மெய்ப்பட[23] – பல்கிப் பெருகும் செயல்பாடுகள்! (minnambalam.com)

இன்று காலையிலேயே உற்சாக டானிக். முகநூல் நண்பர்  ஒருவர் ‘என் எழுத்துக்களைப் படிக்கும்போது தானும் அப்படி எழுத வேண்டும்’என்ற உத்வேகம் வருவதாக கமெண்ட் செய்திருந்தார். இதுபோல பலரும் சொல்லி இருக்கிறார்கள். ஆனாலும் ஒவ்வொரு முறையும் கேட்கும்போதும் சந்தோஷமாகவே உள்ளது. காரணம் நம் செயல்பாடுகள் மற்றவர்களுக்கு உத்வேகத்தைக் கொடுப்பதைவிட நமக்கான அங்கீகாரம் வேறென்ன இருக்க முடியும்? ‘அப்படியா… நல்லது. கடந்த 38 வருடங்களாக நாள் தவறாமல் எழுதிக்கொண்டிருக்கிறேன் என்றால் நம்ப முடிகிறதா?’…

கனவு மெய்ப்பட[22] – பெற்றோர் VS பிள்ளைகள் (minnambalam.com)

தினந்தோறும் காலை ஆறு மணிக்கு ஃபேஸ்புக்கில் ‘இந்த நாள் இனிய நாள்’ என்ற தலைப்பில் தினம் ஒரு செய்தியுடன் ‘அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்’ என்ற வாழ்த்துடன் பதிவிட்டு வருகிறேன். எல்லோருக்கும் தெரிந்த விஷயங்கள்தான் என்றாலும் அதை எல்லா தரப்பினருக்கும் புரியும்படி சுவாரஸ்யமாகச் சொல்வதால் பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. எந்த ஒரு படைப்பானாலும் அது வரவேற்பைப் பெற நிறைய காரணிகள் இருந்தாலும் முக்கியாமாக இரண்டு காரணிகளைச் சொல்லலாம். அவை:…

கனவு மெய்ப்பட[21] – ‘நோ காம்ப்ரமைஸ்’! (minnambalam.com)

சமீபத்தில் நடிகை நயன்தாரா மீதான வார்த்தை அத்துமீறலை அதே சினிமா துறைச் சார்ந்த ஒரு நடிகர் ஒரு சினிமா மேடையிலேயே விமர்சித்தார். இது சினிமா துறைச் சார்ந்த பெண்களுக்கு மட்டுமல்ல. எல்லா துறை சார்ந்த பெண்களுக்கும் பகிரங்கமாக நடக்கின்ற நிகழ்வுகளே. இன்று சமூக வலைதளங்களும் மீடியாக்களும் பெருகி தொழில்நுட்ப உச்சத்தில் இருப்பதால் பெரும்பாலானோருக்கு அது குறித்து கருத்துக்களைப் பகிர ஒரு களமும், தளமும் கிடைத்திருக்கிறது. அது ஒன்றுதான் பெண்கள் விஷயத்தில்…

கனவு மெய்ப்பட[20] – மேஜிக் செய்யும் வார்த்தைகள்! (minnambalam.com)

Words Change everything… என்ற ஒருநிமிட வீடியோ. ஒரு பார்வையற்ற மாற்றுத்திறனாளி தன் கண் முன்னே ‘I am Blind. Please help’ என்று எழுதி வைத்துக்கொண்டு உதவி கேட்டுக்கொண்டிருப்பார். அந்த வழியாகச் செல்வோர் அதை கண்டுகொள்ளாமல் சென்றுகொண்டிருப்பார்கள். ஒரு கல்லூரி மாணவி அந்த போர்டை எடுத்துவிட்டு ‘It is a Beautiful Day. I cannot see it’ என்று எழுதி வைத்தார். இப்போது அந்த பார்வையற்றவருக்கு நிறையபேர்…

கனவு மெய்ப்பட[19] – ஃபேஸ்புக்கில் விரிக்கப்படும் வலை! (minnambalam.com)

வீட்டில் அப்பாவோ அம்மாவோ தாத்தாவோ பாட்டியோ கரிசனமாக ’என்னப்பா(ம்மா) உடம்பு சரியில்லையா…’ என்று உண்மையான  பாசத்துடன் கேட்கும்போது வராத பாசமும் நேசமும் ஃபேஸ்புக்கில் நிஜமுகம் காட்டாத  மனிதர்கள் சொல்லும் ‘டேக் கேர்’ என்ற ஒற்றை வார்த்தையில் எப்படி பொங்கிப் பொங்கி வழிகிறது? உண்மையை போலிகள் முந்திச் செல்லும் கலிகாலம். பொதுவாகவே நம் சமூகத்தில் அக்கம் பக்கம் பார்த்துப் பேசவும், அந்நிய மனிதர்களிடம் அந்தரங்க விஷயங்களை பேசாமல் இருக்கவும் வலியுறுத்தப்பட்டு வளர்க்கப்பட்ட…

கனவு மெய்ப்பட[18] – ஃபேஸ்புக் நம் பர்சனல் டைரி அல்ல! (minnambalam.com)

எங்கள்  நிறுவனத்தில் மல்டிமீடியா பிராஜெக்ட்டுக்காக கிரியேட்டிவ் ஆர்டிஸ்ட்டுகள் தேவை இருந்ததால், இன்டர்வியூ செய்துகொண்டிருந்தோம். அதில் கடைசிவரை தேர்வாகி வந்தவருக்கு முப்பது வயதிருக்கும். நான் கேட்ட கேள்விக்கு அவர் கொடுத்த பதில் முதலில்  அதிர்ச்சியைக் கொடுத்தாலும், இப்படியெல்லாம்கூட நடக்கிறதா என ஆச்சர்யமாக இருந்தது. ‘நல்ல பதவியில், நல்ல சம்பளத்தில்தானே இருந்தீர்கள். அதைவிட்டு ஏன் வெளியே வந்துவிட்டீர்கள்?’  என்ற என் கேள்விக்கு அவர், “மேடம், அதற்குக் காரணம் என் சீனியரால் எனக்கு ஏற்பட்ட…

கனவு மெய்ப்பட[17] – கற்பது மட்டுமே கல்வியாகுமா? (minnambalam.com)

அரசு கலைக் கல்லூரி ஒன்றில் 3 நாட்கள் 12 மணிநேரங்கள், 600 மாணவர்களைச் சந்திக்கும் நல்ல வாய்ப்பு. ‘ஆன்லைனில் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்வாய்ப்பு’கருத்தரங்கில் தொழில்நுட்பத்துடன் வாழ்வியலையும் கலந்து இளங்கலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்காக உரை நிகழ்த்தினேன். அந்தக் கல்லூரியைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்ததால் கொஞ்சம் தயங்கினேன். மாணவர்கள் அமைதியாக உரையைக் கேட்பார்களா என்ற தயக்கம். ஆனால் கல்லூரி முதல்வர், “நீங்கள் அமைதியாகக் கருத்தரங்கை நடத்துவதற்கு நாங்கள் பொறுப்பு” என்று சொன்னார். நிகழ்ச்சியின்…

கனவு மெய்ப்பட[16] – பாடாய்ப் படுத்தும் புகழ்!! (minnambalam.com)

Picture-1 புகழ் – நம்மிடம் இல்லாத திறமைக்காக ஏங்கும் விஷயம் அல்ல. நம்மிடம் பூரணத்துவம் பெற்றிருக்கும் திறமைக்குக் கிடைக்கும் அங்கீகாரம். சிலருக்கு இயல்பாகவும் இயற்கையாகவுமே புகழ் கிடைத்துவிடும். சிலர் கொஞ்சம் PRO செய்து பெறுவார்கள். ஆனால் பெரும்பாலானோர் புகழுக்காகவும், அங்கீகாரத்துக்காகவும் ஏங்கிக்கொண்டிருப்பது அவர்களின் பேச்சு, நடவடிக்கை மற்றும் செயல்பாடுகளில் இருந்தே தெரிந்துவிடும். ஒரு திறமைமிக்க மனிதன் ஏதேனும் ஒரு புள்ளியில் தவிர்க்க முடியாத நபராக வேண்டும். பின்னர் அந்த சூழலே…

கனவு மெய்ப்பட[15] – மேடைக் கூத்துகள்!! (minnambalam.com)

ஒரு பரத நாட்டிய நிகழ்ச்சிக்கு சற்றே தாமதமாகச் சென்றிருந்த என் உறவினர் ஒருவர் அந்த அரங்கின் உள்ளே உட்கார இடம் இருக்கிறதா என தேடியபோது முன் வரிசையில் ஒரு இடம் இருந்ததால் அங்கு சென்று உட்கார முற்பட அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஓடி வந்து, ‘அது சிறப்பு விருந்தினர்களுக்கு’ என மறுத்ததால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் வீடு திரும்பினார். ‘யார் முதலில் வருகிறார்களோ அவர்கள் உட்காரட்டும் என்ற முற்போக்கு சிந்தனையில்லாமல், இன்னமும்…

கனவு மெய்ப்பட[14] – அட்வைஸும் ஒரு கலையே! (minnambalam.com)

ஒருவருக்கு ஆறுதல் சொல்வதும், அட்வைஸ் செய்வதும் அத்தனை எளிதான செயலாக எனக்குத் தோன்றவில்லை. அது ஒரு கலை. சில பத்திரிகைகளில் பெண்களின் உளவியல் பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து பெண்களுக்காக எழுதச் சொல்லிக் கேட்பார்கள். ஆண், பெண் இருபாலரும் சேர்ந்து வாழும் அமைப்புதான் சமுதாயம். அதில் பெண்களின் உளவியல் பிரச்சனைகளுக்கு ஏதோ ஒருவிதத்தில் காரணமாக இருக்கும் ஆண்களைப் பற்றிப் பேசாமல் பெண்களைப் பற்றியோ அல்லது அவர்களுக்காக மட்டுமோ பேசுவது…

error: Content is protected !!