வாழ்க்கையின் OTP-16 (புதிய தலைமுறை பெண் – நவம்பர் 2019)

நவம்பர் 14. குழந்தைகள் தினம். சென்ற மாதம் முழுவதும் குழந்தைகள், மாணவ மாணவிகள், இளைஞர்களுடன் கலந்துரையாடுவதற்கு நிறைய வாய்ப்புகள். அந்த சந்திப்புகள் குறித்து அவ்வப்பொழுது சமூக வலைதளங்களில் தினந்தோறும் நான் எழுதி வரும் ‘இந்த நாள் இனிய நாள்’ பதிவுகளில் சுருக்கமாக எழுதியிருந்தாலும் கொஞ்சம் விரிவாக நம் வாழ்வியலோடு இணைத்துப் பார்ப்போமா? அடிக்கடி எனக்கு தேவதைகளை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். அன்றும் அப்படியே. அன்று ஒரு ப்ராஜெக்ட் மீட்டிங். அலுவலகத்தில்…

வாழ்க்கையின் OTP-15 (புதிய தலைமுறை பெண் – அக்டோபர் 2019)

அக்டோபர் 2. காந்தி ஜெயந்தி.  அவர் குறித்த சிந்தனைகளை நம் வாழ்வியலோடு இணைத்துப் பார்ப்போமா? என் குணநலன்களை தனிப்பட்ட வாழ்க்கைக்காகவும் பணிரீதியாகவும் இருவேறு விதமாக பிரிக்க இயலாது. பொதுவாகவே என்னுடைய பாதையில் நேர்மையாக சென்றுகொண்டிருப்பதற்கும்  நான் சரியாக செயல்படுவதற்கும்  மூன்று விஷயங்களைச் சொல்லலாம். முதலாவது… ஓர் இலக்கை நிர்ணயித்துக்கொள்வது. அதற்கானப் பாதையை உருவாக்குவது. அதில் நேர்மையாகப் பயணிப்பது. இலக்கு என்பது என் நிறுவனம் சார்ந்து சாஃப்ட்வேர் தயாரிப்பதிலும் அனிமேஷன் வடிவமைப்பதில்…

வாழ்க்கையின் OTP-14 (புதிய தலைமுறை பெண் – செப்டம்பர் 2019)

  பொதுவாகவே மனிதர்களுக்கு உண்ண உணவும், இருக்க இடமும், உடுக்க உடையும் அத்தியாவசியம்தான். ஆனால் இவை மட்டுமே மனிதனை நிறைவாக வாழ வைத்துவிடுவதில்லை. நம் ஒவ்வொருவருக்கும் தன்னிறைவும், நமக்கான முக்கியத்துவமும், நம் செயல்களுக்கான அங்கீகாரமும் அவசியமாகிறது. நாம் எப்படி இதையெல்லாம் மற்றவர்களிடம் எதிர்பார்க்கிறோமோ அதை மற்றவர்களுக்குக் கொடுக்கவும் தவறக் கூடாது. ஒரு சிலர் பிறரின் கருத்துக்களை ஏற்க முடியாவிட்டால் மிகவும் நாசூக்காக ‘அருமை… உங்கள் கருத்து நன்றாகத்தான் இருக்கிறது… ஆனால்…’…

வாழ்க்கையின் OTP-13 (புதிய தலைமுறை பெண் – ஆகஸ்ட் 2019)

கடவுள் நம்பிக்கை என்பது நமக்கு உள்ளே நிகழும் அற்புதம். அதற்கு அந்த நம்பிக்கையே சாட்சியாகும். அந்த நம்பிக்கைக்கு உருவகம் கிடையாது. அதனால் அவரவர்கள் உணர்ந்தால்தான் உண்டு. அதை நிரூபணமும் செய்ய முடியாது. ஆனால், நம் உடலுக்கு வெளியே நடக்கும் பலவற்றுக்கு அறிவு சாட்சியாகும். உதாரணத்துக்கு, புகழ்பெற்ற பாடகர் ஒருவரின் கச்சேரிக்கு கூட்டம் அலைமோதுகிறது. அந்தக் கூட்டமும், பாடகரின் திறமையும் அவர் திறமைசாலி என்பதற்கு சாட்சி. நம் அறிவு அதை எடுத்துச்…

வாழ்க்கையின் OTP-12 (புதிய தலைமுறை பெண் – ஜூலை 2019)

பாசிட்டிவோ நெகட்டிவோ, ஒருவர்  பேசிய வார்த்தைகள்  செய்கைகள் எல்லாம் காலப்போக்கில்  மறந்துவிடும். ஆனால், அந்த வார்த்தைகளும் செய்கைகளும் நம்மை எப்படி உணர செய்ய வைத்தன  என்பதைப் பொறுத்துத்தான்  நட்பும் விரோதமும். எழுத்து வடிவில் நாம் கொடுக்கும் தகவல்களுக்கு தரும் கமா, முற்றுப்புள்ளி, ஆச்சர்யக்குறி, கேள்விக்குறி போன்ற Punctuation-களைப் போலவே நம் வாழ்க்கைக்கும் அவை அவசியம் தேவை. வாழ்க்கையில்… எந்தெந்த விஷயங்களுக்கு கேள்விக்குறி ? போடவேண்டும் எந்தெந்த விஷயங்களுக்கு ஆச்சர்யக்குறி !…

வாழ்க்கையின் OTP-11 (புதிய தலைமுறை பெண் – ஜூன் 2019)

ஒரு பிரச்சனைக்கான தீர்வு என்பது, அதை நேரடியாக அணுகி அதனுள் சென்று நேரடியாக தீர்த்துக்கொள்வதும் தெளிவு பெறுவதும் ஒரு வகை. பிரச்சனையை திசை திருப்பி வெளியில் இருந்து அந்தப் பிரச்சனையை அணுகி வேறுவிதமாக அதைக் கையாண்டு தீர்வு காண்பது மற்றொரு வகை. இதை மடைமாற்று முறை எனலாம். முன்னதைவிட பின்னதில் தீர்வு கிடைக்க வாய்ப்பு அதிகம். காரணம்… நேரடியாக அணுகும்போது பிரச்சனைக்கான காரணகர்த்தாவும், பிரச்சனையினால் பாதிக்கப்பட்டோரும் தீவிர உணர்ச்சிக் கொந்தளிப்பில்…

வாழ்க்கையின் OTP-10 (புதிய தலைமுறை பெண் – மே 2019)

யார் நல்லவர் என்ற கேள்விக்கு பதில் சொல்வது கடினம்தான்.  இதற்கான விடை தேடிய போது பல விஷயங்களை ஆராய வேண்டி இருந்தது. தினந்தோறும் காலை 6 மணிக்கு ஃபேஸ்புக்கில் ‘இந்த நாள் இனிய நாள்’ என்ற தொடரை எழுதி வருகிறேன். தினமும் ஒரு நல்ல செய்தியுடன் ‘அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்’ என்ற வாழ்த்துடன் அந்த பதிவை முடிப்பேன். இப்படி மற்றவர்களுக்கு ஒரு நல்ல விஷயத்தைச் சொல்லி அவர்களுக்கு…

வாழ்க்கையின் OTP-9 (புதிய தலைமுறை பெண் – ஏப்ரல் 2019)

சிம்மாசனத்துக்கு ‘ரிசர்வேஷன்’ செய்துவிடுங்கள்! அப்பாவின் தியாகத்தைப் பற்றிய வீடியோ ஒன்றைப் பார்த்தேன். அதற்கு பலரின் கமெண்ட்டுகள் மனதை கனக்கச் செய்தன. எனக்கும் சின்ன ஃப்ளாஷ்பேக் எட்டிப் பார்த்தது. 25 ஆண்டுகளுக்கு முன்னர் நான் சென்னை வந்து என் நிறுவனத்தைத் தொடங்கியபோது பல்துறை சார்ந்தவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது என் கிளையிண்ட் ஒருவர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். ‘எப்படி உங்களால் உங்கள் அப்பா, அம்மா மீது இத்தனை பாசமாக…

வாழ்க்கையின் OTP-8 (புதிய தலைமுறை பெண் – மார்ச் 2019)

நலமாக இருங்கள்… வளமாக வாழுங்கள்! சில நாட்களுக்கு முன்னர் 40 வயதேயான என் நெருங்கிய உறவினர்  ஒருவர் விடுமுறை தினமன்று சாப்பிட்டு தன் 10 வயது பெண் குழந்தையோடு விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென ஹார்ட் அட்டாக். மருத்துவமனை அழைத்துச் செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார். எப்போதும் தன்னை கலகலப்பாக வைத்துக்கொள்ளக்கூடியவர். எந்த விஷயத்தையும் மனதுக்குள் வைத்துக்கொண்டு பாரம் சுமக்க மாட்டார். சிகரெட், மது போன்ற தீய பழக்கங்கள் கிடையாது. குழந்தைகளிடம் ஜாலியாக பேசி…

வாழ்க்கையின் OTP-7 (புதிய தலைமுறை பெண் – பிப்ரவரி 2019)

சமீபத்தில் ஒரு இளம் பத்திரிகையாளர் என்னை நேர்காணல் செய்தபோது ஒரு கேள்வியை முன்வைத்தார். ‘உங்களால் எப்படி சாஃப்ட்வேர், அனிமேஷன், புத்தகங்கள் என இத்தனை பணிகளையும் மல்டிடாஸ்கிங்காக சிறப்பாக செய்ய முடிகிறது… மேலும் பிசினஸ் சவால்களையும், தோல்விகளையும் எப்படி எதிர்கொள்ள முடிகிறது?’      அதற்கு நான், ‘என் முடிவுகளை நானே எடுக்கிறேன்… வெற்றி தோல்வி எதுவானாலும் அது நான் எடுக்கின்ற முடிவுகளால் வந்தவை என்பதால் அதை சரி செய்துகொள்ளும் பக்குவமும் எனக்கு…

error: Content is protected !!