அப்பாவின் கையெழுத்து!
ஒரு பயணத்தின் இடையில்
தங்கி இருந்த ஓட்டலின் அறையை
காலி செய்த நாளன்று
டேபிளின் ஓரத்தில் பறந்து சென்று
கசங்கி சுருண்டிருந்த காகிதத்தைக் கூட
அனாதையாக அங்கேயே விட்டு வர
மனமில்லாமல் அதை சுருட்டி
பெட்டில் அடைத்துக்கொண்டேன்…
காகிதத்தில் முக்கியமாக
எதுவுமில்லை.
அப்பா ஏதோ எழுதிப் பார்த்து
தேவையில்லை என
கசக்கிப் போட்டது
என் பயண பெட்டிக்குள் பயணித்து
ஓட்டல் அறையின் டேபிளில் விழுந்து
ஒரு மூலையில் அடைக்கலமானது…
கசங்கிய காகிதத்தில் இருந்த
அப்பாவின் கையெழுத்துகூட
எங்கோ அனாதையாக குப்பையில்
சென்றுவிடக் கூடாது
என நினைத்து அவசரமாய்
அதை என் கைப்பைக்குள் எடுத்து
அடைத்துக்கொண்டபோது…
சமீபத்தில்
முதியோர் இல்லத்தில்
பிள்ளைகளால் கைவிடப்பட்ட
ஒரு பெற்றோரின் ஏக்க முகம்
நினைவில் வந்து சென்றது!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
டிசம்பர் 13, 2021
#காம்கேர்_கவிதை #COMPCARE_Kavithai