இளமையும் முதுமையும்!
ஒரு கப் காபி
தானே கலந்து குடிக்கும்
வாய்ப்பே இல்லாத சூழலுக்கும்…
ஒரு கப் காபி
கலந்து கொடுக்கக் கூட
ஆளே இல்லாத சூழலுக்கும்…
இடையே தான்
இந்தப் பெருவாழ்வின்
நம்பிக்கை ஒட்டிக்கொண்டு
வேடிக்கைக் காட்டிக்
கொண்டிருக்கிறது.
காம்கேர் கே. புவனேஸ்வரி
டிசம்பர் 26, 2021 | ஞாயிறு
#காம்கேர்_கவிதை #COMPCARE_Kavithai
(Visited 199 times, 1 visits today)








