லவ் யூ என்பது…
அமெரிக்காவில் கிருஸ்துமஸ் முடிந்து டிசம்பர் இறுதியில் இருந்தே ‘வேலன்டைன்ஸ் டே’ கார்டுகள் கண்களில் தென்பட ஆரம்பிக்கின்றன.
மிசெளரியில் தங்கி இருந்தபோது என் கண்களில் அதிகம்பட்ட வாழ்த்து அட்டை இது.
‘வேலன்டைன்ஸ் டே’ அன்று ஆசிரியர்களும் மாணவர்களும் தங்கள் அன்பைப் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளும் விதமாக வாழ்த்து அட்டையை பரிமாறிக்கொள்கிறார்கள். பெரும்பாலும் தாங்களே தங்கள் கைகளால் வாழ்த்தை எழுதுகிறார்கள். ஆனால் நம் ஊரில்தான் ‘வேலன்டைன்ஸ் டே’ காதலர்கள் தினத்துக்காகவே என மாறிவிட்டது.
மிஸ் யூ என்பதும், லவ் யூ என்பதும் நம் நாட்டினருக்கு காதலர்களுக்கு வார்க்கப்பட்ட வார்த்தைகள். ஆனால் அமெரிக்காவிலோ அவை சக மனிதர்களுக்குள் மட்டுமல்ல சக ஜீவன்களுக்குள் தங்கள் நேசத்தை வெளிப்படுத்தப் பயன்படுத்தும் வார்த்தைகள். இன்னும் சொல்லப் போனால் தங்கள் செல்லப் பிராணிகளிடம்கூட சொல்கிறார்கள்.
ஏற்கெனவே நான் சொல்லி இருந்ததைப் போல செல்லப் பிராணிகள் இல்லாத அமெரிக்க வீடுகள் இல்லவே இல்லை எனலாம். குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்கள் போல நாய் பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகளும் அவர்களுக்காக வாங்கிக் கொடுத்துவிடுகிறார்கள் பெரும்பாலானோர்.
வாக்கிங், ஷாப்பிங், கார் பயணங்களில் இப்படி செல்லும் இடங்மெங்கும் அழைத்துச் செல்கிறார்கள்.
‘வேலன்டைன்ஸ் டே’ அன்று…
வெறித்தனமான செல்லப் பிராணிப் பிரியர்களுக்கு அது காதலனோ, காதலியோ, ஆசிரியரோ, மாணவரோ, நண்பரோ, அக்கம் பக்கம் வீட்டுக்காரர்களோ, குடும்பத்தினரோ அது யாராக வேண்டுமானாலும் இருக்கட்டுமே, அவர்களுக்கு செல்லப்பிராணிகளின் உருவம் பொறித்த வாழ்த்து அட்டைகளைக் கொடுத்து தங்கள் அன்பை தெரிவிக்கிறார்கள்.
இது சூப்பரா இருக்கு இல்ல…
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
பிப்ரவரி 14, 2022 | திங்கள் | இந்திய நேரம் காலை 6 மணி