அப்பாக்களின் பரிதாபங்கள்!
நிகழ்ச்சிகளில்
எண்பதை நெருங்கும்
அல்லது
எண்பதைத் தாண்டிய
அப்பாக்களுக்குத்தான்
எத்தனை சந்தோஷம்
தன்னை மட்டும் பிரத்யோகமாக
கவனித்து புகைப்படம்
எடுப்பவர்களைப் பார்த்து…
புகைப்படம் எடுத்தவரிடம்
எம் பொண்ணு / எம் பையன்
அதோ இருக்காள் / இருக்கான்
பாருங்கள்…
அவளிடம் / அவனிடம் காண்பியுங்கள்
என்று கண்கள் சிரிக்க
சொல்லும் போது
கொஞ்சம் பாவமாக இருக்கும்…
அவர்கள் சொல்கிறார்களே
என அவர்களை அழைத்து
புகைப்படத்தை காண்பிக்கும்போது
அவர்கள் பெரிதாக
எந்த அதீத உணர்வும் இன்றி
பார்த்துவிட்டு
சிரித்துக் கடக்கும்போது
அந்த
அப்பாக்கள் மீது
பரிதாபமாக இருக்கும்!
’வாவ், சூப்பர்பா’ என
ஒரு வார்த்தைச் சொன்னால் என்ன
குறைந்தா விடப் போகிறார்கள்?
புகைப்படம் எடுக்கும் விஷயத்திலும் சரி
அதைப் பார்த்து மகிழ்வதிலும் சரி
பிறரிடம் காண்பிக்க விரும்புவதிலும் சரி
எண்பதை நெருங்கும்
அம்மாக்கள்
பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை!
இந்த அப்பாக்களுக்குத்தான்
எத்தனை ஆசைகள்
தன்னை தன் பிள்ளைகள்
அங்கீகரிக்க வேண்டும் என்பதில்…
பிள்ளைகள்
தாங்கள் இயங்கும் சூழலில்
நித்தம்
எத்தனை ‘வாவ்’
எத்தனை ‘சூப்பர்’
எத்தனை ‘அருமை’
எத்தனை ‘அட்டகாசம்’
சொல்லுகிறார்கள்
தங்கள் அங்கீகரத்துக்கு
ஏங்கும் அப்பாவுக்காக
ஒரே ஒரு சின்ன ‘முக எக்ஸ்ப்ரஷன்’
ஒரே ஒரு சின்ன ‘வாவ்’
ஒரே ஒரு சின்ன ‘சூப்பர்பா’
ஒரே ஒரு சின்ன ‘கலக்குப்பா’
சொல்லக் கூடாதா?
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
ஜூன் 25, 2022 | சனிக்கிழமை
#காம்கேர்_கவிதை #COMPCARE_Kavithai