செளக்கியமாக வாழ்பவர்களுக்கு கருணையேஇருக்காதா என்ன?
இவர்
தமிழில் சாஃப்ட்வேர் உருவாக்கியதில் முதன்மையானவர்களுள் ஒருவர் என்றால்…
அப்போ, இவர் தமிழ் மீடியம் போல….
இவர்
சைபர் க்ரைமுக்காக புத்தகங்கள் எழுதியும் விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடத்தியும் வருகிறார் என்றால்…
அப்போ, இவங்களும் டிஜிட்டல் உலகில் நிறைய பாதிக்கப்பட்டிப்பாங்க போல…
என்று எண்ணும் எல்.கே.ஜி மனோபாவம் எப்போது மாறும் என தெரியவில்லை.
ஏன் ஏதேனும் பாதிக்கப்பட்டால்தான் சாதனைகள் செய்ய வேண்டுமா?
நாம் நன்றாக செளக்கியமாக சுகமாக வாழ்ந்தாலும் நம்மைச் சுற்றி இருக்கும் சமுதாயத்தைப் பற்றி சிந்திக்கவே கூடாதா அல்லது முடியாதா? நாம் அழுது புரண்டால்தான் நம்மைச் சுற்றி இருக்கும் சமுதாயத்தில் அழுபவர்கள் கண்ணில் படுவார்களா என்ன?
வழக்கம்போல் இன்றும் சுயவிளக்கம் கொடுத்ததன் விளைவு இந்தப் பதிவு!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
ஜூலை 6, 2022 | புதன்