எல்லாமே சூப்பர்தான்!

எல்லாமே சூப்பர்தான்!

ஒரு நிகழ்ச்சிக்காக நான் தயாரித்த வீடியோக்களில் சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து அனுப்பக் கேட்டிருந்தார்கள். நானும் குவிந்திருக்கும் என் வீடியோக்களை ஒன்றன் பின் ஒன்றாக எடுத்துப் பார்க்கிறேன்.

இரண்டே இரண்டு ரிசல்ட் தான் கிடைக்கிறது.

1. எல்லாமே சூப்பராக இருப்பதைப் போல் இருக்கிறது.
2. எல்லாமே இன்னும் நன்றாக செய்திருக்கலாம் போல் இருக்கிறது.

ஒரு வழியாக எதையுமே மீண்டும் இயக்கி அழகு பார்க்காமல் ரேண்டமாக ஐந்தாறை எடுத்து அனுப்பி உள்ளேன். அப்பாடா என நிம்மதியாக இருந்தது.

நம்மை நாமே தரப் பரிசோதனை செய்துகொள்வதற்கு ஒப்பாக இருந்தது இந்த வேலை!

எது பெஸ்ட் என தேடுவதை விட நம்மிடம் இருப்பது எல்லாமே பெஸ்ட் தான், நாம் செய்தவை அனைத்தும் சூப்பர்தான் என்ற மனோநிலை எவ்வளவு நிம்மதியாக இருக்கிறது.

– காம்கேர் கே. புவனேஸ்வரி, cEO
Compcare Software

ஜூலை 5, 2022 | செவ்வாய்

(Visited 232 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon