சாஸ்வதம்!

சாஸ்வதம்!

பொது இடங்களில் இயங்கும் டிஜிட்டல் பிரின்ட் நிறுவனங்களில் போஸ்ட்டர்கள் ஏதேனும் டிஜிட்டல் பிரிண்ட் எடுக்க செல்லும்போது அவர்கள் நம் பென் டிரைவில் இருந்து அவர்கள் டெஸ்க்டாப்பில் எடுத்து காப்பி பேஸ்ட் செய்துகொண்டு பிரிண்ட் எடுப்பார்கள்.

நான் ஒவ்வொரு முறையும் ‘மறக்காமல் உங்கள் டெஸ்க்டாப்பில் இருந்து டெலிட் செய்து விடுங்கள்’ என்று சொல்வேன். அவர்களும் ஒவ்வொரு முறையும் ‘இது என் சிஸ்டம்தான் மேடம், என்னைத்தவிர யாரும் தொட மாட்டார்கள். நானும் எதையும் தவறாக பயன்படுத்தமாட்டேன், வேறு யாரும் பயன்படுத்த மாட்டார்கள்’ என்று சொல்வார்கள்.

நான் என்பதும், என் என்பதும், அடுத்த நிமிடம் என்பதும் சாஸ்வதம் என நினைத்துக்கொண்டு பேசுபவர்களை என்ன செய்ய?

நானும் விடாமல் ‘எனக்கு உங்கள் மீது 100 சதவிகிதம் நம்பிக்கை உள்ளது. ஆனாலும் என் சேஃப்டிக்காக சொல்கிறேன், நீக்கி விடுங்கள்’ என சொல்லி அவர்கள் டெஸ்க்டாப்பில் இருந்தும், ரீசைக்கிள் பின்னில் இருந்தும் நீக்கிவிடும் வரை காத்திருந்து பார்த்துவிட்டுத்தான் நகர்வேன்.

இப்போதெல்லாம் பழக்கமான நிறுவனங்களில் பழக்கமான பணியாளர்கள் பிரிண்ட் எடுக்கும் வேலை முடிந்ததும் கீபோர்டை என் பக்கம் நகர்த்தி ‘நீங்களே டெலிட் செய்துவிடுங்கள்’ என சொல்லிவிடுகிறார்கள்.

பழக்கம் இல்லாத இடங்களில் ‘அவ்வளவு நம்பிக்கை இல்லைனா ஏன் இங்க வருகிறீர்கள்?’ என்பார்கள். அவர்களுக்கு புரிய வைப்பதாய் நினைத்து நானும் பொறுமையாய் காரணத்தை சொல்லிவிட்டுதான் நகர்வேன்.

புரிந்துகொள்கிறார்களோ அல்லது நான் நகர்ந்ததும் கமெண்ட் அடித்து சிரிக்கிறார்களோ அது கடவுளுக்கே வெளிச்சம்.

ஆனால் பொது இடங்களில் நம்மைப் பற்றிய பர்சனல் தகவல்களை உள்ளடக்கிய டிஸைன்களை பிரிண்ட் எடுக்கும்போது கவனமாக இருக்கவே இதை கடைபிடிக்கிறேன்.

ஏற்கெனவே நாம் கண்ணாடி அறைக்குள் அமர்ந்துகொண்டுதான் யாரும் பார்க்கவில்லை எனவும் பாதுகாப்பாய் இருப்பதாகவும் கனவு கண்டு கொண்டு வாழ்கிறோம். இதில் நாமே வலிய நம்மைப் பற்றிய தகவல்களை கொடுப்பதா?

சமூக ஊடகங்கள் நம் பர்சனல் தகவல்களின் சுரங்கமாகிப் போனதால் இதையெல்லாம் யாருமே பெரிய விஷயமாக எடுப்பதில்லை என்பது வேறு விஷயம்.

யார் என்ன சொன்னால் என்ன… புரிய வைப்பது நம் கடமை அல்லவா?

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

அக்டோபர் 17, 2022 | திங்கள்

(Visited 2,005 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon