நாலு பேர், அதிலோர் நல்லவன்!

 

நாலு பேர், அதிலோர் நல்லவன்!

தவறு செய்பவர்களுக்கு அவர்கள் எண்ணங்கள் தான் மாபெரும் காரணம் என்றாலும், அவர்களை சுற்றி இருப்பவர்களின் உசுப்பேற்றலும் அதிமுக்கிய காரணம்.

ஒரு பெண் தன்னை காதலிக்கவில்லை என்றால் தொந்திரவு செய்யாமல், விட்டு விலகாமல் அவளை கொலை செய்து தன் ஆத்திரத்தை தீர்த்துக்கொள்ளும் வரை கொண்டு செல்வது அவனைச் சுற்றி உள்ள நண்பர்களே. (நல்ல நண்பர்களாக இருப்பவர்கள் மன்னிக்க!)

‘ஒரு பெண்ணிடம் தோத்துட்டே. நீயெல்லாம் ஒரு ஆம்பளையா?’ (உசுப்பேற்றும் வார்த்தைகளை இன்னும் எழுதலாம். ஆனால் எனக்கு எழுத முடியவில்லை) என்றெல்லாம் அவனை உசுப்பேற்றி அவன் தன்னை நண்பர்கள் உட்பட இந்த சமுதாயத்தில் நிலைநிறுத்திக்கொள்ள ஆசிட் வீச்சு, அருவாள் வீச்சு, வன்கொடுமை என தொடந்து கொலை வரை செல்கிறான். இப்படியெல்லாம் செய்து அவனாவது நிம்மதியாக இருக்கப் போகிறானா? எப்படியும் மாட்டிக்கொள்ளத்தான் போகிறான். அவமானப்படத்தான் போகிறான். உலகத்தின் முன் மீடியா வெளிச்சத்தின் மூலம் வெளியில் தலைகாட்ட முடியாமல் அவமானப்படலாம். ஆனால் ஒரு பெண் தன்னை விரும்பவில்லை என சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் அது என்ன மனநிலை.

முன்பெல்லாம், நாலு பேருடன் சேர்ந்திருந்தால் அதிலோர் நல்லவன் இருப்பான். அவனால் மற்றவர்களும் நல்லவர்களாக இருப்பார்கள் என்பார்கள். ஆனால் இன்றைய கதையோ, நாலு பேரில் ஒருவனின் உசுப்பேற்றல்கூட அதிலோர் மனிதனின் வாழ்க்கையை முடித்துவிடலாம்.

நாலு பேருடன் சேர்ந்திருக்கிறோமோ, தனித்துவமாக இருக்கிறோமோ நம் எண்ணங்களுக்கும், நம் சிந்தனைகளுக்கும் நாம் எஜமானனாக இல்லாதவரை நமக்கு நாமே எமன்தான்.

சிறிய இடைவெளியிலும் மற்றவர்களின் ஊடுருவலுக்கு இடம் கொடுத்துவிட்டால் நமக்கு எஜமானன் நாம் அல்ல. கவனம்!

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
அக்டோபர் 18, 2022 | செவ்வாய்

(Visited 385 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon