இன்னும் கொஞ்சம்!
ஒவ்வொரு முறையும்
யாரோ ஒருவருடைய
வயதான தாய் தந்தையின்
மறைவுச் செய்தி
பதிவுகளைக் காணும் போதும்
செய்திகளை கேட்கும் போதும்
மரணம் பற்றி பயமோ
வாழ்க்கை மீதான விரக்தியோ
உண்டாவதில்லை
எனக்கு என்ன
தோன்றும் தெரியுமா?
என் அப்பா அம்மாவிடம்
‘இன்னும் கொஞ்சம்’ பாசமாக இருக்க வேண்டும்…
‘இன்னும் கொஞ்சம்’ பொறுமையாக இருக்க வேண்டும்…
’இன்னும் கொஞ்சம்’ கனிவாக நடந்துகொள்ள வேண்டும்…
இப்படியாக இன்றும்
ஒரு துயரச் செய்தியை
படித்து கடந்து சென்றேன்
‘இன்னும் கொஞ்சம்’ நினைவுகளை
தூக்கி சுமந்துகொண்டு!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
நவம்பர் 14, 2022 | திங்கள்
#காம்கேர்_கவிதை #compcare_kavithai
(Visited 593 times, 1 visits today)