யார் நம்பர் 1?
யார் நம்பர் 1 எழுத்தாளர்? என்ற விவாதம் ஓடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் சில வருடங்களுக்கு முன்னர் ஒரு பதிப்பாளர் என்னுடன் பேசிக்கொண்டிருந்தபோது சொன்ன விஷயம்தான் நினைவுக்கு வந்தது.
‘நாங்கள்தான் பதிப்பகத் துறையிலேயே இதுவரை இத்தனை கோடி எழுத்துக்களை எங்கள் நூல்களுக்கு பயன்படுத்தி புத்தகமாக்கியுள்ளோம்….’
என்றாரே பார்க்கலாம்.
அதாவது இத்தனை புத்தகம் வெளியிட்டுள்ளோம் என்று சொல்வதைப் போல ஒவ்வொரு புத்தகத்திலும் இத்தனை எழுத்துக்களை பயன்படுத்தியுள்ளோம் என்றார். அவர் குறிப்பிடுவது Font ஐ அல்ல. புரியும்படி சொல்கிறேனே, நான் எழுதும் இந்தப் பதிவில் எத்தனை எழுத்துக்கள் உள்ளன என்ற கணக்குபோல என்று வைத்துக்கொள்ளுங்களேன்.
இது எப்படி இருக்கு? அப்படிப் பார்த்தால் 10 வயதில் இருந்து தினமும் எழுதி வரும் நான் எத்தனை கோடி எழுத்துகளை எழுதி இருப்பேன் என கணக்குப் போடும் ஆர்வம் எனக்கும் வந்தது.
– காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
நவம்பர் 15, 2022 | செவ்வாய்