#கவிதை: சர்வரும் மெனு கார்டும் இல்லாத ஓட்டல்!

சர்வரும் மெனு கார்டும் இல்லாத ஓட்டல்!

அந்த ஊர் ஓட்டலில்
நமக்கு மெனு கார்ட்
எல்லாம் கிடையாது…

சர்வரோ, சப்ளையரோ
அல்லது வேறு யாருமோ
நம்மை அணுகி
‘சாப்பிட என்ன வேணும்?’
என்று கேட்க மாட்டார்கள்…

அப்படியானால் அது
‘செல்ஃப் சர்வீஸ்’ ஓட்டலாக
இருக்குமோ என
நினைக்க வேண்டாம்…

நிச்சயமாக
அது செல்ஃப் சர்வீஸ்
ஓட்டலும் அல்ல…

ஆனால்
சர்வ நிச்சயமாக
நம் தகுதிக்கு
என்ன கொடுக்கப்பட வேண்டுமோ
அது நமக்குக்
கிடைக்கும்!

அப்படியனால்
அது
என்ன ஊராய் இருக்கும்?
அந்த ஓட்டலின் பெயர்
என்னவாக இருக்கும்?

நாம் வசிக்கும் ஊர் தான்
அந்த ஊரின் பெயர்
அந்த ஓட்டலின் பெயர்
கர்மா!

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
நவம்பர் 19, 2022 | சனிக்கிழமை
#காம்கேர்_கவிதை #compcare_kavithai

(Visited 187 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon