#Ai: முதல் ‘பீஸ்’ சுவாமிக்கு!

அனைவருக்கும் வணக்கம். நேற்று முன் தினம் என் உருவ சிலையை Ai – ல் வடிவமைத்து பதிவிட்டிருந்தேன். தலைப்பு: ‘என் காலத்துக்குப் பிறகு எனக்கு சிலை வைத்தால் இப்படி இருக்கும்…’.

அதற்கு பலரும் ‘ஏன் இப்படி கற்பனை செய்ய வேண்டும்?’, ‘நெருடலாக இருக்கிறது’, ‘உங்கள் காலத்துக்குப் பிறகு என்ற ஒன்றே இருக்க வேண்டாம்’ என உண்மையான கரிசனத்துடனும், அன்புடனும் கருத்திட்டிருந்தார்கள்.

அனைவருக்கும் நன்றி.

இந்த சிலை வடிவம் என்பது ஓய்வாக அமர்ந்து கனவு காணும் போது தோன்றிய கற்பனை அல்ல.

ஒரு ப்ராஜெக்ட்டுக்காக தனியார் ஸ்டாம்ப் தயாரித்துக் கொடுக்க ஆர்டர் கொடுத்திருந்தார்கள். கிட்டத்தட்ட 50 நபர்களுக்கு இதுபோல உருவ சிலை தயாரித்தோம்.

எங்கள் வீட்டில் இனிப்பு அல்லது காரம் தயாரிக்கும் முன் அதில் முதல் பீஸை சுவாமிக்கு எடுத்து நிவேதனமாக வைத்துவிடுவோம்.

அப்படித்தான் எங்கள் நிறுவனத்திலும் ஒரு ப்ராஜெக்ட் செய்யும் முன் முதல் முதலாக ஒரு மாதிரி (Sample) செய்து சுவாமியிடம் வைத்து பிரார்த்தனை செய்துவிட்டு ப்ராஜெக்ட்டைத் தொடங்குவோம்.

இது எங்கள் சாஃப்ட்வேர் தயாரிப்பு காலம் தொடங்கி, அனிமேஷன் காலம் கடந்து இப்போது Ai காலம் வரை தொடர்கிறது. இனியும் இப்படித்தான் தொடரும்.

அப்படித்தான் ‘பரிசோதனை எலியாக’ என் உருவ சிலையை நானே செதுக்கினேன். அதையே பிரார்த்தனைக்காக வைத்து ப்ராஜெக்ட்டைத் தொடங்கினோம்.

மற்றபடி எதிர்மறை சிந்தனை 1 சதவிகிதம் கூட இல்லை. வழக்கம்போல் நான் உற்சாகமாகவே இருக்கிறேன். உழைக்கிறேன்.

மீண்டும் நன்றி!

காம்கேர் கே. புவனேஸ்வரி, நிறுவனர்
Compcare K Bhuvaneswari
காம்கேர் சாஃப்ட்வேர்
Compcare Software
ஜூலை 18, 2025

(Visited 2,346 times, 6 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon