உழைப்பில் ஊறிய நாட்கள்! வியக்க வைத்த 2004!
1992-ல் ஆரம்பித்த எங்கள் காம்கேர் நிறுவனத்தின் 31 ஆண்டுகால உழைப்பின் சாராம்சத்தை ஆவணப்படுத்திக் கொண்டிருக்கிறேன். ஆதியோடு அந்தமாக விரிவாக பின்னர் எழுதுகிறேன்.
கடந்த ஒரு வார காலமாக, இத்தனை வருடங்களில் மீடியாக்களில் வெளியான செய்திகளை படமாக்கிக்கொண்டிருக்கிறோம். எனவேதான் சுவாரஸ்யமான மீடியா செய்திகளை மட்டும் அவ்வப்பொழுது பகிர்ந்து வந்தேன்.
இதுவரை பத்திரிகை, இணையம், தொலைக்காட்சி, ஆப், வானொலி என தமிழிலும் ஆங்கிலத்திலும் 145 நேர்காணல்கள் வந்துள்ளன, 31 வருட எங்கள் பயணத்தில். தவிர சென்ற மாதத்தில் எடுத்த நேர்காணல்கள் இன்னும் வெளிவரவில்லை. விரைவில் வெளியாகும். அவையும் சேர்ந்துகொண்டால் 150-ஐத் தொட்டுவிடும்.
இவை வெறும் எண்ணிக்கை மட்டுமல்ல. ஒவ்வொரு நொடியும் உழைப்பில் ஊறிய நாட்கள்.
நான் மிகவும் வியந்தது 2004 வருடத்தை. காரணம்
2004 – ல் மொத்தம் 28 நேர்காணல்கள் வெளியாகியுள்ளன. சராசரியாக மாதம் 2 நேர்காணல்கள். சில மாதங்களில் மூன்று. ஒரு பத்திரிகையும், டிவியும் விட்டு வைக்கக்கவில்லை.
முதல் தலைமுறை பிசினஸ் பெண்மணியின் உழைப்பை தங்கள் வீட்டுப் பெண்ணைப் போல் தூக்கி வைத்துக் கொண்டாடி இருக்கிறார்கள்.
அத்தனையும் என் திறமையின் அடிப்படையில் அவர்களாகவே கேட்டுப் பெற்ற நேர்காணல்கள்.
என் திறமையை, என் உழைப்பை எங்கள் காம்கேரின் பங்களிப்பை உலகறியச் செய்வதில் பெரும் பங்கெடுத்த அத்தனை மீடியாக்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
இதை ஏன் இன்று சொல்கிறேன். டிசம்பர் 9 அன்று காரணத்தை சொல்கிறேன். Stay Tuned!
நன்றி. வணக்கம்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
டிசம்பர் 4, 2022 | ஞாயிறு