அநாயாச மோட்சம் உண்டாக!

அநாயாச மோட்சம் உண்டாக!

என் நெருங்கிய நட்பு மற்றும் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் சிலர் உடல் நலம் இல்லாமல், நடமாடவும் முடியாமல், படுத்தப் படுக்கையில் தன் எல்லா தேவைகளுக்கும் பிறரின் உதவியை நாடி, நினைவு இருந்தும் நினைவில்லாத கொடிய துயரில் காலத்தைக் கடத்தி வருகிறார்கள்.

தினமும் எங்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் போது அவர்கள் நலனுக்கும் சேர்ந்துப் பிரார்த்தனை செய்து வருவோம்.

அப்போதுதான் ஸ்ரீ காஞ்சிப் பெரியவர் அநாயாச மரணம் / மோட்சம் உண்டாக ஒரு ஸ்லோகத்தை அருளி உள்ளது நினைவுக்கு வந்தது. அதை தினமும் பாராயணம் செய்து வந்தாலோ அல்லது காதால் கேட்டு வந்தாலோ அநாயாச மோட்சம் கிடைக்கும் என்றும் படித்த நினைவு.

அந்த ஸ்லோகத்தை எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் வாயிலாக ஒரு வீடியோ தயாரித்து வெளியிட்டுள்ளோம்.


இதை தினமும் பாராயணம் செய்ய முடியாத சூழலில் இருப்பவர்களுக்கு இந்த வீடியோவில் உள்ள ஆடியோவை காதால் கேட்கும்படி செய்தாலும் பலன் கிடைக்கும்.

குறிப்பு: அநாயாஸ மோட்சம் என்றால், நோய்வாய்ப்பட்டு, பல நாட்கள் படுக்கையில் கிடந்து, தன் எல்லா தேவைகளுக்கும் பிறரைச் சார்ந்து வாழ்ந்துகொண்டு, தானும் கஷ்டப்பட்டு, மற்றவர்களுக்கும் துன்பம் கொடுக்கிறோமே என வருந்தி வாழாமல், சட்டென்று மோட்சம் பெறுவதாகும்.

அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

ஜனவரி 5, 2023 | வியாழன்

(Visited 463 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon