சேவைன்னா என்ன?

சேவைன்ன என்ன?

சேவைக்கும், சேவை மனப்பான்மைக்குமான ஒப்பீட்டை திரும்பவும் விளக்கும் சூழல் சமீபத்தில்!

ரொம்பவெல்லாம் என்னை பேச வைக்கவில்லை. சின்ன உதாரணம் சொன்னேன். புரிந்துகொண்டார்கள்.

நல்ல டிராஃபிக். அந்த இடத்தில் அன்று பணியில் இருந்த போக்குவரத்துக் காவலர் மிகவும் பிசியாக போக்குவரத்தை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் கண் தெரியாத பெரியவர் ஒருவர் சாலையைக் கடக்க நிற்கிறார். அத்தனை பிசியான நேரத்திலும் காவலர் அவரை கைப் பிடித்து சாலையைக் கடக்க உதவுகிறார்.

இந்த இடத்தில் பேசுபொருள் சேவைமனப்பான்மை.

காவலர் அவர் பணிக்கு சம்பளம் வாங்குகிறார். அவரது செயல் போக்குவரத்து கட்டுப்பாடு மட்டுமே. ஆனாலும் அவர் தன் பணியில் கொஞ்சம் கூடுதல் அக்கறை எடுத்து பார்வைத்திறன் அற்ற பெரியவருக்கு உதவுகிறார். அந்தக் காவலர் தன் பணியை சேவை மனப்பான்மையுடன் செய்கிறார் என்று பொருள்.

அதுவே, ஒரு தொண்டு நிறுவனத்தில் இருந்து இரண்டு பேர் தினமும் அந்த பரபரப்பான சாலைக்கு வந்திருந்து போக்குவரத்தை கட்டுப்படுத்தி மற்றவர்களுக்கு உதவுகிறார்கள் என வைத்துக்கொள்வோம்.

இந்த இடத்தில் பேசுபொருள் சேவை.

தொண்டு நிறுவனத்தில் வந்திருப்பவர்கள் செய்வது முழுக்க முழுக்க சேவை. ஏனெனில் அவர்கள் அன்றாட செயலே இப்படி தேவை இருக்கும் இடங்களுக்குச் சென்று உதவுவது மட்டுமே.

இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்ளக் கூடாது. சம்மந்தப்பட்டவர்களை சங்கடப்படுத்தவும் கூடாது.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
ComPcare Software

ஜனவரி 26, 2023 | வியாழன்

(Visited 458 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon