செல்ஃபி!

செல்ஃபி!

அதிகாலை 3 மணி அளவில்
சென்னை விமான நிலையம்…
அத்தனை சுறுசுறுப்பு…
அங்கு இயங்கிக்கொண்டிருக்கும்
உலகம் தனி அழகு…
விமானத்தில் இறங்கி
வந்து கொண்டிருப்பவர்கள்
தங்கள் உறவுகளையும், நட்புகளையும்
தேடும் கண்களுடன்…
தூரத்தில் இருந்தே கை அசைத்து
குதூகலத்துடன் ஓடோடி வரும் உறவுகள்…
தாத்தா பாட்டிகளின் அன்பின் அணைப்பில்
பேரன் பேத்திகள்…
அம்மா அப்பாவின் அணைப்பில்
வளர்ந்த குழந்தைகள்…
நீண்ட நாட்களாய் பிரிந்திருந்த
இளம் ஜோடிகள்
பரவசக் கண்களுடன்…

இன்று கூடுதலாய் நான் கண்ட காட்சி
இரண்டு வயது குழந்தையின் பிறந்த நாள் போல
விமானத்திலேயே நன்றாக அலங்கரித்து
அழைத்து வந்திருந்தார்கள்…
புத்துணர்வுடன் இருந்தது அந்தக் குழந்தை
விமான நிலையத்தில் காத்திருந்த
அவர்கள் உறவினர்கள் ஓரமாக ஓரிடத்தில்
பேனரை கட்டுவதைப் போல
இருவர் பிடித்துக்கொண்டிருக்க

குழந்தைக்கான பிறந்த நாள் கேக்கை
ஒரு பெண் கையில் தட்டு
வைத்துக்கொண்டு நிற்க
அந்த குழந்தையை விட்டு
மெழுகுவர்த்தி
ஊதி அணைக்கச் செய்து
புகைப்படம் எடுத்துக்கொண்டு
அடடா அத்தனை அருமை…

காத்திருந்த
முக்கால் மணி நேரமும்
சென்றதே தெரியவில்லை…

இதற்கிடையில்
சில திரைப்பிரபலங்கள் வர
பார்வையாளர்கள் வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினார்கள்…

ஒருசிலர் அவர்களுடன் செல்ஃபி
எடுத்துக் கொண்டார்கள்…

அட, இத்தனை நேரமாக இங்கே
ஒரு பிரபலம் நின்று கொண்டிருக்கிறேன்😍
நல்ல வேளை யார் கண்ணிலும் படவில்லை😊
அதனால் எனக்கு நானே ஒரு செல்ஃபி!

– காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
ComPcare Software
மார்ச் 1, 2023 | புதன்

(Visited 1,264 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon