#AI : செயற்கை நுண்ணறிவு!

செயற்கை நுண்ணறிவு!

இயந்திரம் என்பது கம்ப்யூட்டராக இருக்கலாம், மொபைலாக இருக்கலாம், ரோபோவாக இருக்கலாம் அல்லது வெப்சைட்டாகவோ, மொபைல் ஆப்பாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

அவை செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) நுட்பத்தைப் பெற்றிருத்தல் அவசியம். எந்த அளவுக்கு தரவுகள் (Data) அவற்றுள் இருக்கிறதோ அந்த அளவுக்கு அவை சிறப்பாக இயங்கப் பெறும்.

மனிதர்களையே எடுத்துக்கொள்வோமே. நல்ல கற்பனை வளம் உள்ள ஒரு நபர் சிறந்த படைப்புகளைக் கொடுக்க வேண்டுமானால் நான்கு சுவருக்குள் அமர்ந்து கொண்டிருந்தால் அது சாத்தியப்படாது. வெளி உலகில் நடப்பதை நுணுக்கமாகப் பார்க்க வேண்டும், தாய்மொழியில் நிறைய புத்தகங்கள் வாசிக்க வேண்டும், மொழிபெயர்ப்பு நூல்களையும் தவறவிடக் கூடாது, எல்லா மொழித் திரைப்படங்களையும் பார்க்க வேண்டும், இசையை ரசிக்க வேண்டும் இப்படி தன்னை இயற்கையுடனும் வெளி உலக நடப்புடனும் பின்னிப் பிணைத்துக் கொண்டு செயல்படும்போதுதான் ஒரு படைப்பாளியிடம் இருந்து ஆகச் சிறந்த படைப்புகள் வெளிவரும். உள்ளுக்குள் செல்லும் தரவுகள் தரமானதாக இருந்தால்தானே சிறந்த படைப்புகள் உருவாகும்.

இதே லாஜிக்தான் செயற்கை நுண்ணறிவின் நுட்பத்திலும். எத்தனைக்கு எத்தனை அதனிடம் பயிற்சிக்காகக் கொடுக்கப்படும் தரவுகள் (Data) அதிகரிக்கின்றனவோ அத்தனைக்கு அத்தனை செயற்கை நுண்ணறிவு அதிவேகமாக செயல்படும். துல்லியமான அவுட்புட்டைக் கொடுக்கும்.

– காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
ComPcare Software
மார்ச் 11, 2023 | சனிக்கிழமை

(Visited 4 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon