செயற்கை நுண்ணறிவு மனித மூளையையே விழுங்கிவிடுமா?
நேற்று நடைபெற்ற ஒரு மீட்டிங்கில் என்னிடம் ஒரு கேள்வி வைக்கப்பட்டது.
1990-களில் இருந்த தொழில்நுட்பத் தொடக்கத்துக்கும் இப்போது 2023-ல் நடந்துகொண்டிருக்கும் தொழில்நுட்ப புரட்சிக்கும் என்ன வித்தியாசம்?
1990-களில் மக்கள் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் தங்கள் வேலைக்கு உலை வைத்துவிடும் என பயந்தார்கள். எதிர்ப்பு தெரிவித்தார்கள். கம்ப்யூட்டர் பக்கம் பார்வையைத் திருப்பாமலேயே எதிர்வினை ஆற்றினார்கள். கடைசியில் ஜெயித்தது என்னவோ தொழில்நுட்பம்தான்.
2023 -ல் தொழில்நுட்பம் மனிதனின் மூளையையே அபகரித்துச் சென்றுவிடும், மனித குலத்தையே அழித்துவிடும், மனிதனையே விழுங்கிவிடும் என்றெல்லாம் பயப்படுகிறார்கள். பயப்படுகிறார்களே தவிர 2023 -ல் வேகமெடுக்கத் தயாராக இருக்கும் செயற்கை நுண்ணறிவினால் கிடைக்கும் பயன்களை அனுபவித்துக்கொண்டே புலம்புகிறார்கள். சிலர் எதிர்ப்பதைப் போல் பாவலா காட்டுகிறார்கள். கடைசியில் ஜெயிப்பது என்னவோ தொழில்நுட்பமாகத்தான் இருக்கும்.
எதற்கு பயப்பட வேண்டும்? தொழில்நுட்பத்தின் லகான் நம் கைகளில் இருக்கும்வரை எதற்கும் பயப்பட வேண்டாம். எந்த நுட்பம் வந்தாலும் அவை நம் வாழ்க்கையை எளிமைப்படுத்தவே என்ற தெளிவோடு காலத்தோடு ஒன்றி வாழ்வோம். வளம்பெறுவோம்.
பேசுவோம்…
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
ComPcare Software
மார்ச் 24, 2023 | வெள்ளி