மனநலன்!
எங்கள் குடும்ப நண்பர் ஒருவரது குடும்ப நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தோம். மிக நீண்ட வருடங்கள் கழித்த சந்திப்பு. பரஸ்பர நலன் விசாரிப்புகள் முடிந்த பிறகு, ‘இப்போது உங்கள் பிசினஸ் எப்படி போய்க் கொண்டிருக்கிறது?’ என விசாரித்தவர் அன்பின் நெகிழ்ச்சியாக ‘நீங்கள் ஒரு கம்பெனில வேலை செய்திருந்தா சி.ஈ.ஓ லெவலுக்கு போயிருப்பீங்க…’ என்றார்.
அதற்கு நான் ‘இப்பவும் நான் சி.ஈ.ஓ லெவலைத் தாண்டி பிரசிடெண்ட் நிலையில் தானே இருக்கிறேன்… அதுவும் நானே உருவாக்கிய ஐடி நிறுவனத்துக்கு…’ என்றேன்.
அப்போதும் அவர் சமாதானமடையாமல் ‘என்ன இருந்தாலும்…’ என அவர் இழுக்க அதற்கு மேல் அவரை உணர்ச்சிவசப்பட வைக்காமல் பேச்சை மாற்றினேன்.
புரியாதவர்களுக்கு புரிய வைப்பதைவிட பேச்சை மாற்றுவது நம் மன நலனுக்கு நல்லதல்லவா?
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
செப்டம்பர் 25, 2023 | திங்கள்