அசத்தும் Ai – நிகழ்ச்சி குறித்து!

என் கடன் பணி செய்து கிடப்பதே!

அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

பதிப்பக உலகின் முதன் முயற்சியாக அச்சுப் புத்தகத்தில் திரையில் தோன்றி பேசும் Ai அவதார்கள் – Ai-காக நான் எழுதிய ‘அசத்தும் Ai-Part1’, ’அசத்தும் Ai-Part2 இனி எல்லாம் மெட்டாவெர்ஸ்’ என்ற இரண்டு நூல்களின் அறிமுக நிகழ்ச்சி யு-டியூபில் தினமும் காலை 7 மணிக்கு நடைபெறுகிறது.

தினமும் ஒரு சிறப்பு விருந்தினர் இரண்டு Ai நூல்கள் குறித்தும் அறிமுக உரை (சிற்றுரை) நிகழ்த்துவார்கள். புத்தகக் காட்சி நடைபெறும் 19 நாட்களும் 19 சிறப்பு விருந்தினர்கள்.

புத்தகம் வாங்காவிட்டாலும் நான் அந்தப் புத்தகத்தில் என்ன புதுமை செய்துள்ளேன் என்பதை தெரிந்து கொள்ளவாவது 19 நாட்களும் சிறப்பு அழைப்பாளர்கள் ஆற்றும் உரையை கவனிக்கவும். அதுவே நான் எடுக்கும் முன்னெடுப்புகள் அத்தனைக்கும் உத்வேகமாக இருக்கும்.

‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என தொழில்நுட்பத்துக்காக ஆராய்ச்சிகள் பல செய்து சாஃப்ட்வேர்கள் உருவாக்கியபடி என் நாட்கள் கழிந்தாலும், நான் கற்றதையும் பெற்றதையும் இந்த சமுதாயத்துக்காகவும் எழுத்து பேச்சு காணொளி என கொடுத்தபடியேதான் உள்ளேன். நான் செல்லுகின்ற பாதையெங்கும் பூக்களை தூவி வரும் தலைமுறையினருக்கு அன்புடன் பாதை அமைத்தபடியே கடந்து சென்று கொண்டிருக்கிறேன்.

எனவே, தொழில்நுட்பம் அறியாதவர்களுக்கும் புரியும் வகையில் எழுதி உள்ள அந்த நூலை வாங்கிப் பயன்பெறுங்கள், பரிசளியுங்கள். அதுகூட இரண்டாம்பட்சமாக வைத்துக்கொள்ளுங்கள். முக்கியமாக, இந்த இரண்டு நூல்களில் நான் எடுத்துள்ள பெரும் முயற்சி என்ன என்றாவது தெரிந்துகொள்ள தினமும் காலை 7 மணிக்கு புத்தக அறிமுக உரையில் சிறப்பு விருந்தினர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கேட்டுப் பயனடையுங்கள். இன்றில்லாவிட்டாலும் என்றாவது Ai சங்கமத்தில் கரைய பேருதவியாக இருக்கும்.

புத்தகங்களை எப்படி வாங்குவது?
வாட்ஸ் அப்: 9444949921

அனைவருக்கும் நன்றி!

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
ஜனவரி 4, 2024 | வியாழன்

#ai_avatar, #ai_avatar_tamil_book
#bookfair2024

(Visited 6,346 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon