கணினித் தமிழ்ப் பயிலரங்கத்துக்கு அறக்கட்டளை அமைக்க வித்திட்ட திருமிகு. கலைவாணி!
தற்போது மதுரை அமெரிக்கன் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் திருமிகு. கலைவாணி அவர்கள், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் முதுமுனைவர் ஆய்வாளராக இருந்தபோது (2018) தமிழ்நாடு அரசிடம் இருந்து இளம் தமிழ் ஆய்வாளர் விருது பெற்றார். அதற்குக் கிடைத்த ஒரு லட்சம் ரூபாயை என்ன செய்தார் தெரியுமா?
வி.வி.எல் மோட்டார்ஸ் யமஹா வீ.விஜயலெட்சுமி வீரபாண்டியன் நினைவு அறக்கட்டளையைத் தொடங்கி, அதில் தனக்குப் பரிசாகக் கிடைத்த ஒரு லட்சம் ரூபாயை முதலீடாக போட்டு, அந்த அறக்கட்டளையை அழகப்பா பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்து வருடா வருடம் கணினித் தமிழ்ப் பயிலரங்கை நடத்த ஏற்பாடு செய்தார்.
வி.வி.எல். மோட்டார்ஸ் யமஹா நிறுவனத்தின் தலைவராக இருக்கும் இவரது கணவர் திருமிகு. விக்னேஷ் ஆனந்தும், இதே நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக இருக்கும் இவரது மாமனார் திருமிகு. வீ.வீரபாண்டியன் அவர்களும் இவரது விருப்பத்துக்கு முழு சம்மதம் அளித்து வருடந்தோறும் கணினிப் பயிலரங்கு வெற்றிகரமாக நடைபெற உதவி வருகிறார்கள்.
2024-ஆம் ஆண்டு நடைபெற்ற கணினிப் பயிலரங்கிற்குத்தான் என்னை சிறப்பு அழைப்பாளராக Ai குறித்து பேச அழைத்திருந்தார்கள்.