Ai – தொழில்நுட்பத்துக்காக இரண்டு புத்தகங்கள்!

 

அசத்தும் Ai – Part1, அசத்தும் Ai-Part2(இனி எல்லாம் மெட்டாவெர்ஸ்) நூல்களின் சிறப்பம்சம்  

  1. ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு Ai அவதார் வாசகர்களுடன் பேசும். பதிப்பக உலகில் அச்சு புத்தகத்தில் Ai அவதார் தோன்றி பேசுவதெல்லாம் முதன் முயற்சி என்பதுடன் வாசகர்களுக்கு புதுமையான அனுபவத்தைக் கொடுக்கும்.
  2. எங்கள் ஐடி நிறுவனத்தில் நாங்கள் தயாரிக்கும் Ai சாஃப்ட்வேர்கள் மற்றும் ஆப்கள் மூலம் நேரடியாகக் கிடைத்துவரும் அனுபவங்களை எல்லாம் இந்த இரண்டு நூல்களில் பகிர்ந்துகொண்டுள்ளேன். இதுவும் எனக்குப் புதிதல்ல. 1992-ல் இருந்தே தொழில்நுட்ப உலகில் எனக்குக் கிடைத்து வரும் அனுபவங்களை எல்லாம் அந்தந்தக் காலகட்டத்தில் புத்தகம், ஆடியோ, அனிமேஷன், வீடியோ என பல்வேறு வடிவங்களில் இந்த சமுதாயத்துக்கு பதிவு செய்வது என் வழக்கம். அந்த வகையில் இதோ இப்போது Ai காக இரண்டு நூல்கள்.
  3. எளிய தமிழில் புரியும்படியான விளக்கம்.
  4. தொழில்நுட்பம் சாராதவர்களுக்கும் புரியும்படியாக எழுதப்பட்டுள்ள இந்த நூல்கள், தொழில்நுட்பம் சார்ந்தோருக்குமே மற்றொரு புதிய கோணத்தைக் காட்டு அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும்.
  5. ஒவ்வொரு அத்தியாயத்தின் முதன்மைப் படத்தை Ai ஐ வைத்தே வரைந்து கொடுத்திருக்கிறோம்.

இப்படிக்கு

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
பிப்ரவரி 12, 2024 | திங்கள்

#ai_avatar, #ai_avatar_tamil_book
#bookfair2024

(Visited 2,843 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon