தமிழ்ப் பதிப்பக உலகில் முதன் முதலாக Ai-காக வெளியாகியுள்ள அசத்தும் Ai – Part1, அசத்தும் Ai-Part2 இனி எல்லாம் மெட்டாவெர்ஸ் என்ற இரண்டு நூல்கள் குறித்து சிவகாசியில் இருந்து திருமிகு. கண்ணன் சரண்யா அவர்களின் கருத்து. அருமையாக மனதில் இருந்து எழுதி உள்ளார். நீங்களும் வாசியுங்களேன்!
என் மகளையும் கவர்ந்த காம்கேர் புவனேஸ்வரி!
காம்கேர் புவனேஸ்வரி அவர்களின் எழுத்துக்களை என்னுடைய கல்லூரிநாட்களில் அவர் தமிழ் கம்ப்யூட்டரில் எழுதி வந்த தொடர்கள் மூலம் கற்றறிந்தேன். பிறகு ஃபேஸ்புக் மூலம் அவர் தினந்தோறும் எழுதி வரும் பதிவுகளை விடாமல் படித்து வருகிறேன். அவர் எழுத்துக்களை வாசிக்கும்போது ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷன் கிடைக்கும். எனக்கு கம்ப்யூட்டர் மீது பேரார்வம். ஆனால் கல்லூரியில் அந்த குரூப் எடுத்துப் படிக்க முடியாத சூழல்.
என் மகள் சந்தியா ஏழாம் வகுப்பு படிக்கும்போது ‘Top 10 Women Achievers in TamilNadu’ குறித்த ப்ராஜெக்ட் செய்த போது அரசியலில் மாண்புமிகு ஜெயலலிதா மேடமிற்கு அடுத்து தொழில்நுட்பத்துக்காக காம்கேர் கே. புவனேஸ்வரி அவர்களை குறிப்பிட்டு குறிப்பு எழுதி இருந்ததை படித்துவிட்டு போனில் அழைத்துப் பாராட்டினார்.
காம்கேர் புவனேஸ்வரி அவர்கள் ஃபேஸ்புக்கில் எழுதிவரும் தொழில்நுட்பப் பதிவுகளில் குறிப்பாக Ai பற்றிய பதிவுகள் என்னை மிகவும் கவர்ந்தன. அதனால் அவர் எழுதி வெளியிட்டுள்ள அசத்தும் Ai – ன் இரண்டு நூல்களையும் வாங்கினேன். ஆசிரியர் உரையே அசத்தலாக இருந்தது. அதிலும் ஒவ்வொரு அத்தியாயத்திலும் வாசகர்களுடன் பேசுகின்ற Ai அவதார்களும் அசத்தலோ அசத்தல்.
Ai குறித்து ஏராளமான விஷயங்களை தமிழில் அழகாக எழுதி உள்ளார். தமிழில் வெளியான முதல் Ai புத்தகம் இவருடையதுதான். அதிலும் இரண்டு புத்தகங்கள் பாகம்-1, பாகம்-2 என.
கம்ப்யூட்டர் அறியாதவருக்கும் புரியும் வகையில் எழுதியுள்ள இவர் எழுதிய அசத்தும் Ai, இனி எல்லாம் மெட்டாவெர்ஸ் இரண்டு நூல்களும் பரவலாக சென்றடைய வேண்டும் என வாழ்த்துகிறேன்.
நன்றி
கண்ணன் சரண்யா
ஹோம் மேக்கர்
சிவகாசி
பிப்ரவரி 10, 2024