அனைத்து திசைகளில் இருந்தும் அங்கீகாரம்!
6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு!
அசத்தும் Ai – Part1 மற்றும் அசத்தும் Ai – Part2 (இனி எல்லாம் மெட்டாவெர்ஸ்) என்ற இரண்டு நூல்களையும் சேவாலயா குழுமப் பள்ளியில் பயிலும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகளுக்கு ஆறு மாத பயிற்சி வகுப்புகளாக எடுக்கவும், +1, +2 மாணவர்களுக்கு அடுத்தக் கல்வி ஆண்டில் Reference புத்தகங்களாக வைக்கவும் முடிவு செய்துள்ளார்கள்.
சேவாலயா கடிதம் : தமிழில்!
சேவாலயா கடிதம்: English!
பல்கலைக்கழக அங்கீகாரம்!
இந்த இரண்டு நூல்களையும் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் வைக்க தொலைபேசியில் அறிவித்துள்ளார்கள். அதிகாரப்பூர்வமாக அறிவித்தவுடன் எந்த பல்கலைக்கழகம் என பகிர்கிறேன்.
தமிழ் அறிந்த அனைவருக்கும்!
இரண்டுக்கும் இடையில் தொழில்நுட்பம் அறிந்தவர், அறியாதவர், வயதில் சிறியவர், பெரியவர் என வயது வரம்பின்றி, கல்வித் தகுதி அவசியமின்றி, தமிழ் படிக்கத் தெரிந்த அனைவரும் வாங்கி படித்து வருகிறார்கள். விரிவாக அவர்களால் ரிவ்யூ எழுதத் தெரியாவிட்டாலும் ‘சூப்பராக உள்ளன இரண்டு புத்தகங்களும், Ai குறித்த அச்சம் நீங்கி இன்னும் கற்க வேண்டும் என்ற ஆவல் வந்துள்ளது’ என்ற கருத்தை உள்ளடக்கிய தகவல்கள் நித்தம் என் வாட்ஸ் அப்பை நிரப்புகின்றன.
இப்போது சொல்லுங்கள் இந்த இரண்டு நூல்களும் யாருக்காக?
எனக்குத் தெரிந்த பதில்: தமிழ் படிக்கத் தெரிந்த அனைவருக்கும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
பிப்ரவரி 21, 2024 | புதன்