ஒரு புத்தகத்தை முழுவதும் படிப்பதற்கு முன் அதன் சாராம்சத்தை சுருக்கமாக சொன்னால் வாசகர்கள் அந்த நூலை விரிவாக படிக்க முழுவதுமாக படிக்க உந்துதலாக இருக்கும். எனக்கெல்லாம் இப்படி சொன்னால் ‘ஆஹா ஆஹா ஆனந்தம்தான்’.
இப்போதுகூட தினமும் காலையில் வாக்கிங் செல்லும்போது அம்மாவுடன் பேசிக் கொண்டே செல்வேன். குறிப்பாக நான் அரசியல் பேசுவது அந்த நேரத்தில் மட்டும்தான். அம்மா நிறைய படிப்பார், நாட்டு நடப்புகளை அலசி ஆராய்வார், நிறைய உரைகளை ஆடியோ வீடியோவாக கேட்பார், பார்ப்பார். சரி தவறுகளை நுணுக்கமாக ஆராய்ந்து ஆணித்தரமாக பேசுவார். நான் கேட்டுக் கொண்டே நடப்பேன். ஒரு மணி நேரம் வாக்கிங் செல்வதே தெரியாது. உடலும் மனமும் புத்துணர்வுடன் வீட்டுக்குத் திரும்புவோம். அப்பாவுடன் வெளியில் செல்லும்போது பேச வேறு டாப்பிக்.
பள்ளி, கல்லூரி படிக்கின்ற காலகட்டத்தில், நான் நேரடியாக பாடபுத்தகத்தை படித்து புரிந்துகொள்வதற்கு முன், என்னுடன் படிக்கிறவர்கள் அந்தந்த பாடத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது நான் காதால் கேட்டுக் கொண்டிருந்தாலே முக்கால்வாசி படித்ததைப் போன்ற நிறைவு வந்துவிடும். மீதமிருக்கும் கால்வாசி நான் பாடத்தினுள் உள்ளே நுழைந்து அலசி ஆராய்ந்து மனதுக்குள் தள்ளினால்போதும். எனக்கு எதையும் சுவைபட / கருத்து நயத்துடன் எழுதும் ஆற்றல் இருந்ததாலும், என் கையெழுத்து மிக (உண்மையிலேயே) அழகாக இருந்ததாலும் மதிப்பெண் அதிகம் எடுப்பேன்.
இந்த யுக்தியைத்தான் அசத்தும் Ai – நூலில் நான் ஒவ்வொரு அத்தியாயத்திலும் புகுத்தித் தயாரித்தேன். Ai நூலாக இருப்பதால் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒவ்வொரு Ai அவதார் அந்தந்த அத்தியாய சுருக்கத்தை வாசகர்கள் கண் முன் தோன்றி விவரிக்கும். அதுவே அந்த அத்தியாயத்தை முழுவதும் படிக்க உந்து சக்தியாக இருக்கும்.
அசத்தும் Ai – Part1, அசத்தும் Ai – Part2 என்ற இரண்டு நூல்களிலும் மொத்தம் 30 அத்தியாயங்கள். நானே 30 அவதாரங்கள் மூலம் (Ai அவதார்) உங்கள் கண் முன் தோன்றி பேசுகிறேன்.
எளிய தமிழில் தொழில்நுட்பம் சாராதவரும் படித்துப் புரிந்துகொள்ளும் வகையில் நான் எழுதியுள்ள அசத்தும் Ai- Part1, Part2 இரண்டு நூல்களையும் வாங்குவதற்கு வாட்ஸ் அப் : 9444949921
நன்றி
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, Founder & CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
ஜூன் 3, 2024 | திங்கள்