ஆஹா ஆசுவாசம்!
இப்போதெல்லாம் ‘இது கூடவா தெரியாமல் இருக்கும்?’ என்று மேன்மையாக யோசித்து, ‘இதுவும் தெரியாமல் இருக்கலாம்’ என ஜாக்கிரதையாக சிந்தித்து இரண்டுக்கும் இடையில் மனதை பண்படுத்தி அவர்களுக்குத் தோதாக இன்புட்டுகளை கொடுத்து தட்டிக் கொடுத்து செயல்பட வேண்டி உள்ளது.
ஒரு பிரிண்ட்டிங் பணிக்காக சென்னையிலேயே மிகப்பெரிய அச்சகத்தாருடன் மல்லு கட்டிய பொழுதில் உதித்த பொன் கருத்து!
இன்று அச்சகத்தில், நேற்று வங்கியில், அதற்கும் முதல் நாள் போஸ்ட் ஆஃபீஸில், அதற்கும் முதல் நாள் கொரியர் அலுவலகத்தில், அதற்கும் முன்பு பத்திரிகை அலுவலகத்தில்… இப்படி செல்லுமிடமெங்கும் அச்சில் வார்த்தாற்போல் ஒரே அனுபவம்…
எப்போதேனும் எங்கேயேனும் ஓரிருவர் கொஞ்சம் ஸ்மார்ட்டாக வேலை செய்வதை பார்த்தாலோ அல்லது இப்படி எடுத்துக் கொள்ளலாம் நம் வேலை சுலபமாக பிரச்சனை இன்றி நடந்துவிட்டாலோ என்னவோ இமாயலய சாதனை செய்துவிட்டதைப் போல ஒரு ஆசுவாசம் உண்டாகிறது.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, Founder & CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
ஜூன் 3, 2024 | திங்கள்