அறம் வளர்ப்போம்
உலகிலேயே முதல் முதலாக Ai தொழில்நுட்பத்தில்!
****
எண்ணம்-ஆக்கம்-இயக்கம்-Ai உருவாக்கம்
காம்கேர் கே. புவனேஸ்வரி
அறம் வளர்ப்போம் யாருக்காக?
*தினம் ஒரு அறவார்த்தை* – இது குழந்தைகளுக்கு மட்டுமோ, சிறுவர் சிறுமிகளுக்கு மட்டுமோ, மாணவ மாணவிகளுக்கு மட்டுமோ, இளைஞர் இளைஞிகளுக்கு மட்டுமோ அல்ல.
பெரியோர்களுக்கும், பெற்றோர்களுக்கும், ஆசிரிய பெருமக்களுக்கும், உங்களுக்கும் ஏன் எழுதிய எனக்கும் சேர்த்துத்தான் இந்த படைப்பை Ai தொழில்நுட்பத்தில் இயக்கி வருகிறேன்.
அறம் வளர்ப்போம் எங்கு வெளியிடப்படுகிறது?
இந்தத் தொடர் ஒரு Ai படைப்பு. யு-டியூபில் வெளியிட்டு வருகிறேன்.
அறம் வளர்ப்போம் படைப்பை எழுதியவர் யார்?
இந்தப் படைப்பு நான் (காம்கேர் கே. புவனேஸ்வரி) எழுதிய அறநூலில் உள்ள அறவார்த்தைகளுக்கு 3 வரி விளக்கம். ஆத்திச்சூடி – 1 வரி, திருக்குறள் – 2 வரிகள், நாலடியார் – 4 வரிகள். போலவே ‘அறம் வளர்ப்போம்’ – 3 வரிகள். அவ்வளவே.
புதுமையான இன்றைக்கு வளர்ந்து வரும் நம் மக்களுக்கு பரிச்சியமாகி வரும் Ai தொழில்நுட்பத்தில் வடிவமைத்து வெளியிடுகிறோம்.
அறம் வளர்ப்போம் படைப்பை தினமும் தவறவிடாமல் பார்க்க என்ன செய்ய வேண்டும்?
ஃபேஸ்புக்கில் இங்கு நான் பகிராவிட்டாலும் தினமும் அறவார்த்தையை பார்த்து கேட்டு பகிர நினைத்தால் எங்கள் காம்கேரின் யு-டியூப் சேனலை சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளுங்கள், வாட்ஸப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
யு-டியூப் சானல்: https://tinyurl.com/CKB-YouTube
வாட்ஸ் அப் சானல்: https://tinyurl.com/CKB-WhatsApp-Channel
அறம் வளர்ப்போம் படைப்பிற்கு இப்போது அவசியம் என்ன?
சமீபத்தில் பள்ளி மாணவிகளை வைத்து எடுக்கப்பட்ட சினிமாவின் ட்ரைலர் ஒன்று பெருவாரியான மக்களை சென்றடைந்து ‘எப்படி இப்படி எல்லாம்? என்னவோ போங்க…’ என சமூக வலைதளங்களில் ‘ச்சூ’ கொட்டிய பலராலும், ‘இதுதான் சுதந்திரம்’ என ஆதரவு கரம் நீட்டிய சிலராலும் அந்த சினிமாவுக்கு இப்போதே நல்ல வரவேற்பு. அறத்தில் இருந்து நம்மை மெல்ல மெல்ல நகரச் செய்யும் சினிமாக்களும் (நல்ல சினிமா எடுப்பவர்கள் மன்னிக்க), சமீபத்தில் எட்டாம் வகுப்பு பள்ளி மாணவியை …. செய்து கர்…கிய ஆசிரியர்களும் (நல்ல ஆசிரிய பெருமக்கள் மன்னிக்க) இன்னும் பெருகாமல் இருக்கவும், அறம் தழைக்கவும் எங்கள் (உங்கள்) ‘அறம் வளர்ப்போம்’ படைப்பை ஷேர் செய்து பரப்புங்கள். தீயவை குறைய நல்லவை பெருக நான் எடுக்கும் முயற்சிக்கு உதவுங்கள்.
ஊர் கூடி தேர் இழுப்போம்! காசா, பணமா? நல்லதை பரப்ப ஒரு லைக், ஒரு ஷேர் அவ்வளவு தானே! நான் சொல்வது சரிதானே? என்ன சொல்கிறீர்கள்?
காம்கேர் கே. புவனேஸ்வரி, நிறுவனர்
Compcare K Bhuvaneswari,
காம்கேர் சாஃப்ட்வேர்
Compcare Software
பிப்ரவரி 7, 2025 | வெள்ளிக்கிழமை | காலை 6.30 மணி