மலைகளுக்கு எதற்கு போர்வை!
#usatrip2025_ckb-3
வாக்கிங் செல்லும்போது பாடல்கள் கேட்டுக் கொண்டு நடப்பது வழக்கம். சில சமயங்களில் நானே தேர்வு செய்து கேட்பதுண்டு. பல சமயங்களில் ஏஐ தொழில்நுட்பம் நமக்கு என்ன பிடிக்கும் என தெரிந்துகொண்டு அவற்றை தானே தேர்ந்தெடுத்து கொடுப்பதும் உண்டு. அந்த வகையில் நேற்று வாக்கிங் செல்லும்போது இந்தப் பாடல் வரிகளை கேட்க நேர்ந்தது.
‘காற்றுக்கென்ன வேலி? கடலுக்கென்ன மூடி?’
என்ன திரைப்படம் என பார்த்தபோது ‘அவர்கள்’ என காட்டியது.
அப்போதுதான் ஹவாய் சென்றபோது அங்கு வாகனங்கள் செல்லும் பாதைகளில் வழிநெடுக உள்ள மலைகளுக்கு வலை போட்டு மூடி இருந்ததை பார்த்தது நினைவுக்கு வந்தது.
இயற்கை சீற்றங்களின் போது மலைகள் சரிந்து நேரடியாக வாகனங்கள் மீது விழுந்து பெரிய விபத்துக்களை ஏற்படுத்தி விடக் கூடாது என முன்னேற்பாடாக செய்திருந்தார்கள்.
என் மனம் ‘காற்றுக்கென்ன வேலி, கடலுக்கென்ன மூடி, மலைக்களுக்கென்ன போர்வை…’ என தானாகவே ரிதம் சேர்த்து பாடியது.
காம்கேர் கே. புவனேஸ்வரி, நிறுவனர்
Compcare K Bhuvaneswari
காம்கேர் சாஃப்ட்வேர்
Compcare Software
மே 3, 2025 | சனிக்கிழமை